தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படப்பிடிப்பிற்கு முடித்த கையுடன் பிஸியாக சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 


 



 


அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அதைப் பெற்றுக் கொள்வதற்காக அபுதாபி சென்ற நடிகர் ரஜினிகாந்த் அந்நாட்டின் காலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது கலீஃபா அல் முபாரக்கை நேரில் சந்தித்து கோல்டன் விசாவை பெற்றுக்கொண்டார். இந்த விசா கிடைக்க முக்கிய பங்கு வகித்த அவரின் நண்பரும் லுலு குழுமத்தின் தலைவருமான யூசப் அலியை சந்தித்தார். மேலும் இந்த விசாவை தனக்கு வழங்கியமைக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு வீடியோ மூலம் மனமார்ந்த நன்றிகளை வீடியோ மூலம் தெரிவித்து கொண்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது. 


 


நடிகர் ஷாருக்கான், மம்மூட்டி, கமல்ஹாசன், சஞ்சய் தத், மோகன்லால், திரிஷா, ஜோதிகா, விஜய் சேதுபதி, கே.எஸ். சித்ரா உள்ளிட்ட ஏராளமானோர் ஐக்கிய அரபு அமீரக அரசு வாங்கும் கோல்டன் விசாவை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


 



அதைத் தொடர்ந்து தற்போது அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'BAPS Hindu Mandir' இந்து கோயிலை நேரில் தரிசனம் செய்து வழிபட்டுள்ளார். அங்கு அவர் சுவாமி நாராயணசாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு கோயிலின் தலைமை அர்ச்சகரிடம் ஆசி வாங்கும் புகைப்படங்கள் அனைத்தும்  இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 


 


25 ஏக்கரில் 7 கோபுரங்களுடன் சுமார் 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு வெள்ளை சலவை கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த கோயிலை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


சினிமா அப்டேட் 


கடந்த ஆண்டு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் காமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' படத்தில் கேமியோ ரோலில் நடித்ததை தொடர்ந்து 'ஜெய்பீம்' புகழ் டிஜே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாக தயாராக உள்ளது. அதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மோசட் வான்டட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார்.