ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 10) ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் வீடியோ வைரலாகி வருகிறது.


ஜெயிலர் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சில வருடங்களாகவே சூப்பர் ஹிட் படம் கொடுக்காத ரஜினிக்கு ஜெயிலர் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலரில் இருந்து வெளியான பாடல்கள், ட்ரெய்லர் அனைத்துமே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


‘முத்துவேல் பாண்டியன்’ என்ற செம்ம மாஸ்ஸான கேரக்டரில் ரஜினியைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், ரசிகர்களிடம் இருந்து ஜெயிலர் படத்துக்கு என்ன ரிசல்ட் கிடைக்கிறது என்பதைப் பார்க்காமல் இமயமலைக்கு பறந்துவிட்டார் சூப்பர்ஸ்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இமயமலை சென்றுள்ள ரஜினி அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “கொரோனா காரணமாக 4 ஆண்டுகள் இமயமலை செல்லவில்லை என்பதால், இப்போது செல்கிறேன்” என்றார்.


ரஜினிகாந்திடம் ஜெயிலர் திரைப்படம் எப்படி உள்ளது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதனை நீங்கள் தான் படம் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்" எனக் கூறிவிட்டு கிளம்பினார். இதனால் ரஜினி ஜெயிலர் படத்தைப் பார்த்துவிட்டாரா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில், ஜெயிலர் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்த வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ரஜினிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் காட்சியை ஜெயிலர் படக்குழுவினருடன் பார்த்து ரசித்துள்ளார்.


வெள்ளை வேஷ்டி, கறுப்பு டீசர்ட்டில் ரொம்பவே சிம்பிளாக வருகை தந்த ரஜினி, படம் பார்த்த பின்னர் நெல்சன் உட்பட ஜெயிலர் படக்குழுவினருடன் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் ஜெயிலர் பார்த்துவிட்டு தான் தலைவர் இமயமலை சென்றுள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், ரஜினி ஜெயிலர் ஸ்பெஷல் ஷோ பார்த்த வீடியோவையும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.




ஜெயிலர் திரைப்படத்தை நாளை தியேட்டரில் பார்க்க அவரின் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஜெயிலர் படம் குறித்த தகவல்களை தினந்தோறும் பார்க்க முடிகின்றது. கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.  ஒரு சில தனியார் நிறுவங்கள் ஜெயிலர் திரைப்பட ரிலீசையொட்டி தங்கள் நிறுவனத்திற்கு நாளை விடுமுறை அளித்திருப்பதாகவும் சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.


ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் குடிப்பழக்கத்தால் தான் தன்னால் பல்வேறு விஷயங்களை செய்ய முடியாமல் போனதாக கூறினார். மேலும் கழுகு-காக்காவை ஒப்பிட்டு ஒரு குட்டிக்கதை சொன்னார்.


காகம் கழுகை டிஸ்டர்ப் செய்யும் ஆனால் கழுகை மிஞ்ச முடியாது என்றார். இந்தக் கதை தான் பல யூடியூபர்களுக்கு கண்டெண்ட் ஆகி உள்ளது. இணையத்தை திறந்தாலே காகம்-கழுகு கதை குறித்த விவாதம் தான் சென்று கொண்டிருக்கிறது.  மேலும் இந்தக் கதை ஜெயிலர் படம் குறித்த ஹைப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க,


Amit Shah: ”தினமும் 17 மணிநேரம்.. வாரிசு அரசியல், ஊழலுக்கு முற்றுப்புள்ளி” - மோடிக்காக பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா