தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான குணச்சித்திர நடிகையாக நடித்தவர் சாந்தி வில்லியம்ஸ். ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய திருமண வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்தும், திரைப்பயணம் குறித்தும் பல அனுபவங்களை பகிர்ந்து இருந்தார். 


நெஞ்சத்தை கிள்ளாதே ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் முதன்முதலாக சாந்தி வில்லியம்ஸ் தனது கணவர் வில்லியம்ஸை சந்தித்துள்ளார். மிகவும் பிரபலமான கேமரா மேன். சாந்தியின் தந்தையை பேசிப்பேசியே மயக்கியுள்ளார் வில்லியம்ஸ். அதனால் சாந்தியை வில்லியம்ஸுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார். சாந்திக்கு அதில் விருப்பமே இல்லை என்றாலும் அப்பா பிளாக்மெயில் செய்ய ஒரு வழியாக வலுக்கட்டாயமாக அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 


 



 


"அவரோடு வாழ்ந்த வாழ்க்கையில் பாசம் என்பதை காட்டியதே கிடையாது. சந்தோஷமான மெமரிஸ் என எதுவுமே கிடையாது. என்னுடைய பிள்ளைகள் கூட பல முறை என் அப்பா இப்படி இருக்காருன்னு கேப்பாங்க. அவங்க அப்பா மேல ரொம்ப பாசமா இருப்பாங்க ஆனா அவர் கடைசி மகன் மீது மட்டும் தான் பாசமா இருந்தாரு. 


ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கடைசி பையனை தூக்கிகிட்டு போனாரு. அப்போ ரஜினி சார் வந்து இவரிடம் பையனை அவருக்கு தத்து கொடுக்க சொல்லி கேட்டு இருக்கார். உனக்கு தான் நாலு பிள்ளைங்க இருக்குல. எனக்கு ஆம்பள பசங்க இல்ல. எனக்கு தத்து குடுத்துடு அப்படினு சொல்லி இருக்காரு. அதற்கு  நூறு கோடி ரூபாய் கொடுத்தலாலும் என்னோட பையனை குடுக்க முடியாது அப்படினு சொல்லிட்டு தூக்கிட்டு வந்துட்டாராம் வில்லியம்ஸ். வீட்டுக்கு வந்ததும் பையனை கேட்கிறான். நான் எப்படி என்னோட பையனை கொடுப்பேன் அப்படினு கம்பளைண்ட் பண்ணாரு. 



அவரை அவர் உணர்ந்தது இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னாடி தான். அப்போது தான் அவருக்கு மனைவி, பிள்ளைகள் எல்லாம் தெரிந்தது. இவர்கள் தான் என்னை பார்ப்பார்கள். வேறு யாரும் வரமாட்டார்கள் என அப்போது தான் உணர்ந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போதெல்லாம் கடன் வாங்கி தான் நான் அவரை காப்பாற்றினேன். மெட்டி ஒலி சீரியல் தயாரிப்பாளர் சித்திக் சார் கேட்ட உடனே பணம் கொடுத்து உதவினார். அதை கடனாக தான் நான் பெற்றுக் கொண்டேன். அந்த நிறுவனத்தில் இருந்து வெளியில் வரும் போது கடனை மொத்தமா அடைத்த பிறகு தான் வெளியே வந்தேன்" என்றார் சாந்தி வில்லியம்ஸ்.