Vettaiyan Shoot Wrap : மொத்தம் 148 நாள்.. அசுரத்தனமான உழைப்பு.. வேட்டையன் படப்பிடிப்பு நிறைவு
ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

வேட்டையன்
சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் த.செ. ஞானவேல். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் 'வேட்டையன்'.
ஃபகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அமிதாப் பச்சன், ராணா டகுபதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 10ம் 'வேட்டையன்' படம் வெளியாக உள்ளதால் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Just In




வேட்டையன் படப்பிடிப்பு நிறைவு
படப்பிடிப்பு முடிவடைந்திருந்தாலும் ஒரு சில பேட்ச் வர்க் தேவையான காட்சிகள் மட்டும் மீதமிருந்தன. கேரளாவில் திருவந்தபுரம் , தமிழ்நாட்டில் திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. மொத்தம் 148 நாட்கள் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பேட்ச் வர்க் உட்பட மொத்தமாக முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு முழூ வீச்சில் செயல்பட்டு வருகிறது.
மனசிலாயோ என்கிற இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சில நாட்கள் முன்பாக இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. ஜெயிலர் படத்தில் காவாலா பாடலைப் போல இந்தப் பாடலுக்கு பெப்பியான ஒரு பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்
கூலி
ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ரஜினியின் இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஜூன் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படத்தில் பல நடிகர்கள் இணைந்து வருகிறார்கள். இப்படத்தில் நடிகர் நாகர்ஜூனா , சத்யராஜ் , நடிகர் ஆமீர் கான் உள்ளிட்டவர்கள் நடிக்க இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை கூலி படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறது.