தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய திரையுலகாலும் கொண்டாடப்படுபவர் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் “அண்ணாத்த “ திரைப்படம்  உருவாகி வருகிறது. படத்தை வீரம், விவேகம், சிறுத்தை உள்ளிட வெற்றிப்படங்களை கொடுத்த சிவா இயக்குகிறார். அண்ணாத்த படத்தின்  படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ரஜினிகாந்த் கடந்த மாதம் 19 ஆம் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். ரஜினிகாந்த் கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். இதற்காக அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அவ்வப்போது சிகிச்சை எடுத்து வருகிறார்.  படப்பிடிப்புகளுக்கு இடையிலும் செக்கப் செய்வதற்காக  அவர் அமெரிக்கா செல்வது வழக்கம். 




இந்நிலையில்  கொரோனா ஊரடங்கு காரணமாக விமான சேவை முடக்கப்பட்டுள்ளதால், அவர் மீண்டும் சிகிச்சைகாக அமெரிக்கா செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. விமான சேவை மீண்டும் தொடங்குவதில் தாமத நிலை தொடர்ந்ததால் , கடந்த மாதம் இறுதியில் மத்திய அரசின் அனுமைதியை பெற்று தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றடைந்தார். மருத்துவ பரிசோதனை முடிந்து , சில நாட்கள் அங்கு தங்கியிருந்த ரஜினிகாந்த்  சிகிச்சை பெறும் 'மாயோ கிளினிக்' முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகி  சமூக வலைதளங்களில் வைரலானது.   இது தவிற தனது மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரையும் சந்தித்து வந்தார். இந்நிலையில்  ரஜினியை பரிசோதித்த அமெரிக்க மருத்துவர்கள் இனிமேல் வேலை பளுவை குறைத்துக்கொள்ளுங்கள் என்றும் ஸ்டண்ட் காட்சிகள் செய்வதை தவிர்த்து விடுங்கள் என்றும்  அறிவுரை கூறியதாக அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.




 நேற்று அதிகாலை  3 மணியளவில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அப்போது விமான நிலையத்தில் குழுமியிருந்த அவரது ரசிகர்கள் “தலைவா” என கோஷமிட்டு உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள “அண்ணாத்த” படம் , வரும் நவம்பர் 4 ஆம் தேதி , தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.


ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தை  இளம் இயக்குநர் ஒருவருக்கு கொடுத்ததாக கூறப்படும் நிலையில் ,’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ’ படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக  கோலிவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ’ படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குநரை தொலைபேசி வாயிலாக தொடர்புக்கொண்டு  பாராட்டியதாகவும், எனக்கும்  தங்கள் கதையில் நடிக்க விருப்பம் உள்ளது என  தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது . இதன் அடிப்படையிலேயே  இந்த எதிர்பார்ப்பு தற்போது நிலவுகிறது. ரஜினி நடிப்பில்  உருவாக உள்ள அடுத்த படம் அவரின் 169 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.