திருப்பதிக்கு சென்ற ரஜினி


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அங்குள்ள அறையில் தங்க வைக்கப்பட்டார்.




முன்னதாக, அங்கு சொகுசு காரில் வந்து இறங்கிய அவருடன் சிலர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவரை தேவஸ்தானம் அதிகாரிகள் லிஃப்ட் வழியாக அழைத்துச் சென்று அறையில் தங்க வைத்தனர். 


சென்னையில் துவங்கும் சர்வதேச திரைப்பட விழா


CIFF  எனப்படும் சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கவுள்ள நிலையில் என்னென்ன படங்கள் திரையிடப்படுகிறது என்ற விவரங்களை காணலாம்.




இன்று நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறார். சென்னை சத்யம் சினிமாஸில் உள்ள 4 திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் என மொத்தம் 5 ஸ்க்ரீன்களில் நாள் ஒன்று 4 காட்சிகள் வீதம் 20 படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் அரசு திரைப்பட கல்லூரி மாணவர்களின் 9 குறும்படங்களும் இதில் இடம் பெறுகின்றன. 


WWE ஸ்டார்ஸ் உடன் வந்தியத்தேவன்






தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்திக்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது. தொடர் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து ரசிகர்களுக்கு சிறப்பான திரை விருந்தை கொடுத்து சந்தோஷத்தில் திகைக்கவைத்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான விருமன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து ரசிகர்கள்  மிகவும் ஆவலாக எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.


தற்போது நடிகர் கார்த்தி குக்கூ புகழ் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற பிரபலமான மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் WWE நிகழ்ச்சியின் விளம்பரத்தில் இணைந்துள்ளார் நடிகர் கார்த்தி. 


 உதயநிதி பற்றி பேசிய அமீர் 




நேற்று அமைச்சராக பதவியேற்ற, உதயநிதி ஸ்டாலின், இனிமேல் படங்களில் நடிக்கபோவதில்லை என்று அறிவித்தார். இதன் பின்,  ‘உயிர் தமிழுக்கு’ என்ற படத்தில், நடிக்கும் அமீர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று பேசினார்.அதில் பேச துவங்கிய அவர், மொழி பற்றி பேசினார்.  பின் இந்தப்படம் மொழி பிரச்னையை பேசும் படம் அல்ல, மொழியை பற்றி பேசும் படம் என கூறினார். சமீபத்தில் இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை ஆகிய பல பிரச்னைகள் நடந்து வரும் சமயத்தில், இந்த படமானது அதற்கு குரல் கொடுக்கும் வகையில் அமையும். இப்படி பேசிகொண்டு இருந்தவர். திடீர் என்று அரசியல் பற்றி பேசினார். அதன் பின், இன்று அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினை பற்றியும் பேசினார். அவர், அமைச்சராவதால்,மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். 


படத்திற்காக அணுகுண்டு சோதனையை மேர்கொள்ளும் நோலன் 







சமீபத்தில் கிறிஸ்டோபர் நோலன் ஒரு பேட்டியில் பங்கேற்ற போது இப்படத்திற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் டிரினிட்டி அணுகுண்டு சோதனையை உருவாக்குவது மிக பெரிய சவாலாக இருந்தது என்றார். மேலும் ஓபன் ஹெய்மர் படத்திற்காக மாதிரி அணுகுண்டு சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் நோலன். VFX மேற்பார்வையாளரான ஆண்ட்ரூ ஜாக்சன் என்பவர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.