2024 முன்னணி நடிகர்களின் ரிலீஸ்:


2024 ஆம் ஆண்டில் 200க்கும் அதிகமான படங்கள் வெளியானது. இதில், விஜய், சூர்யா, ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களும் இடம் பெற்றன. ஆனால், அஜித் படம் மட்டும் இந்த ஆண்டில் வெளியாகவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. எனினும், அஜித்தின் தீனா படம் மீண்டும் திரையில் வெளியானது. அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி தீனா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளில் மட்டும் இந்தப் படம் ரூ.50 லட்சம் வரையில் வசூல் குவித்தது. இதே போன்று ரஜினியின் தளபதி மற்றும் விஜய்யின் கில்லி படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.


தளபதிக்கு திருப்புமுனை ஏற்படுத்திய கில்லி:


தளபதி விஜய்யின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் 'கில்லி' படமும் ஒன்று. அதிக வசூலையும் வாரி குவித்தது. ஒக்கடு என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான கில்லி படம் 2004ல் திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கபடி விளையாட்டையும், காதல் கதையையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'கில்லி' படம் இந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.




கில்லி ரீ -ரிலீஸ்:


 டிவியிலே பல முறை கில்லி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தாலும் கூட திரையரங்கில் வெளியிடப்பட்டதும் ரசிகர்களின் படம் பார்க்க திரையரங்கில் குவிந்தனர். எப்படி இப்படம் ரிலீஸ் ஆன போது ரூ.50 கோடி வசூல் செய்ததோ அதே போல், ரீ-ரிலீஸிலும் ரூ.50 கோடி வரை வசூல் குவித்து சாதனை படைத்தது.


தளபதி ரீ-ரிலீஸ்:


இதே போன்று ரஜினிகாந்தின் தளபதி படமும் இந்த ஆண்டு ரீ- ரிலீஸ் செய்யப்பட்டது. ரஜினி நடித்த படங்களில் அதிக முக்கியத்துவம் பெற்ற படங்களில் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தளபதி. மம்மூட்டி, அரவிந்த் சாமி ஆகியோருடன் இணைந்து ரஜினிகாந்தும் நடித்திருந்தார். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்





தலைவரா Vs  தளபதி: 
 
ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி இந்த படம் வெளியானது. இந்தப் படம் இப்போது வரையில் ரூ.1.50 கோடி வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. கில்லி மற்றும் தளபதி இந்த இரு படங்களின் ரீ- ரிலீசுக்கு அதிக வரவேற்பை பெற்றாலும், ரஜினிகாந்தின் 'தளபதி' படத்தை விட பல மடங்கு வசூலை குவித்து கில்லியாக வசூலில் மிஞ்சியது என்னவோ தளபதி விஜய் தான்.