கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கவிருப்பதாக போஸ்டருடன் அறிவிப்பை வெளியானது. இந்த போஸ்டர் ஹாலிவுட் படமான 'த அவுட்ஃபிட்' படத்தின் ஃபோஸ்டரைப் போல் இருப்பதாகவும் படத்தின் கதையும் அவுட்ஃபிட் படத்தின் தழுவலாக இருக்கலாம் என ரசிகர்கள் அவதானித்துள்ளார்கள். தி அவுட்ஃபிட் படத்தின் படத்தின் கதை மற்றும் விமர்சனத்தை பார்க்கலாம்

Continues below advertisement

த அவுட்ஃபிட் பட விமர்சனம் 

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான கிரைம் த்ரில்லர் திரைப்பட தி அவுட்ஃபிட். கிரஹம் மூர் இப்படத்தை இயக்கியுள்ளார். லண்டனில் இருந்து சிகாகோவிற்கு வந்து டெய்லரிங் ஷாப் வைத்து தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் இந்த படத்தின் ஹீரோ வயதானாலும் கோட்  செய்வதில் அவரை விட திறமையானோர் இல்லை என்ற அளவிற்கு தனது வேலையில் திறமைமிக்கவராக  இருக்கிறார் நாயகன் அங்குள்ள மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பலின் தலைவனிற்கு இவருடைய வேலைப்பாடு பிடித்து அவருடன் பழக்கமாவதோடு மட்டும் இல்லாமல் ஹீரோ எந்தவொரு வம்பு தும்புக்கும் போகாமல் இருப்பதை தனக்கு சாதகமாக மாற்றி அடிக்கடி தனது சட்டவிரோத தகவல் தொடர்பு, பணமாற்றும் & ஒரு மீட்டிங் ஸ்பாட் மையமாகவும் அவரது கடையை பயன்படுத்தி வருகின்றனர் ஒரு நாள் இரவில் அந்த கேங்ஸ்டரின் விசுவாசியுடன் அவரின் மகன் குண்டடிபட்ட நிலையில் கடையினுள் நுழைய இதன்பின் நடக்கும் தரமான சம்பவங்கள் தான் படம் டெய்லர் கடைக்குள் உள்ல  2 அறைகளில்  தான் மொத்த படமும் நடக்கிறது.  திரைக்கதை மெதுவாக சென்றாலும்  அடுத்து என்ன நடக்கும் என்கிற சுவாரஸ்யத்திற்கு குறையில்லாமல் செல்லும் திரைக்கதை. 

Continues below advertisement

தலைவர் 173 படத்தின் போஸ்டரிலும் கத்திரிகோள் , நூல் ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஒருவேளை அதே கதையின் தழுவலாக இருந்தாலும் படத்தில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஆங்கிலத்தில் பெரும்பாலான கதை வசனங்களின் வழி நகரும் படம். ஆனால் தமிழில் இதே கதை ரஜினி ரசிகர்களுக்கு ஏற்ற விதமாக ஆக்‌ஷன் , செண்டிமெண்ட் , நகைச்சுவை என மாற்றியமைக்கப்படலாம். இரு படங்களின் போஸ்டர்கள் ஒரே போல் இருப்பதால் அவுட்ஃபிட் படத்தின் தழுவலாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறதே தவிர படக்குழு சார்பாக தலைவர் 173 கதை பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.