லோகேஷ் கனகராஜின் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜுடன் ரஜினிகாந்த் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலைவர் 170
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 170 ஆவது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். த.செ .ஞானவேல் இந்தப் படத்தை இயக்க ரித்திகா சிங், ரானா டகுபதி, மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்ள் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி பிறந்தநாளன்று இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியானது.
தலைவர் 171
இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குவதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படியான நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த இரண்டு படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைவர் 172
ரஜினிகாந்த் அவர்களின் 172 ஆவது படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பரியேறும் பெருமாள் , கர்ணன், மாமன்னன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது வாழை என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது தொடர்ந்து துருவ் விக்ரமுடனான அவரது படம் படப்பிடிப்பில் உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் தனுஷுடன் இணைய இருக்கிறார். இந்தப் படங்களை இயக்கிய பின் ரஜினிகாந்துடன் அவர் இயக்கவிருக்கும் படத்தின் தகவல்கள் வெளியாகலாம் . லலித் குமார் 7 ஸ்கிரீன் சார்பாக இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயிலர் 2.. ?
மாரி செல்வராஜுடனான படத்திற்கு பின் ரஜினிகாந்த் மீண்டும் இயக்குநர் நெல்சன் திலிப்குமாருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைவது ஒருவேளை ஜெயிலர் 2 படத்திற்கான வேலைகள் பின்னால் நடந்துவருகிறதோ என்கிற ஆர்வத்தில் உள்ளார்கள்.
மேலும் படிக்க : Kalaingar 100: கலைஞர் நூற்றாண்டு விழாவின் அடுத்த கொண்டாட்டம்.. இன்று நடைபெறும் "இசையாய் கலைஞர்" நிகழ்ச்சி..!