இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்கனவே வெளி நாடுகளில் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கிய நிலையில் இந்தியாவில் இன்று முதல்  முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. தற்போதைக்கு குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே முன்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில் ரஜினி ரசிகரள் டிக்கெட்களை புக் செய்ய போட்டி போட்டு வருகிறார்கள். 

Continues below advertisement

நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் , ரம்யா கிருஷ்ணன் , யோகி பாபு , வித்யா பாலன் , மோகன்லால் , ஷிவராஜ்குமார் , ஜாக்கி ஷ்ராஃப் , எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து விஜய் சேதுபதி , ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். 

ஜெயிலர் 2 இன்சைட் ரிப்போர்ட்ஸ் 

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. படத்தை பார்த்த பலர் படம் நிச்சயம் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெறும் என  நம்பிக்கை அளித்து வருகிறார்கள். 

Continues below advertisement

வசூல் எதிர்பார்ப்பு 

ஜெயிலர் திரைப்படம் உலகலவில் ரூ600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது ஜெயிலர் 2 படத்தின் மீது வசூல் ரீதியாக பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போதுவரை வரை ஜெயிலர் 2 முன்பதிவுகளில் ரூ 11 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.