தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக முன்னிலை – மதுரை மத்திய தொகுதியில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தவெகவினர் கொண்டாட்டம்.
மதுரை மத்திய தொகுதியில் தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ள மாப்பாளையம் பகுதியில் தவெகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மத்திய தொகுதி உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ள மாப்பாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஒன்றுகூடி, தேர்தல் முன்னிலை நிலவரத்தைத் தொடர்ந்து உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அப்போது திமுகவுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள், பட்டாசுகள் வெடித்தும், அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்யும் ஓட்டுநர்கள், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
