Coolie Release Date: சூப்பர்ஸ்டார் வர்றாரு.. கூலி படம் ரிலீஸ் டேட் அறிவிப்பு! என்னைக்கு தெரியுமா?
Rajinikanth Coolie Release Date: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளது.

Rajinikanth Coolie Release Date: இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகி வந்த நிலையில், கூலி படத்தின் வெளியீட்டு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் ரிலீசாகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
Just In




எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு வெளியான வேட்டையன் படம் ஓரளவு வெற்றி பெற்றது. இதனால், மிகப்பெரிய அளவு கூலி படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் பிரபல நடிகர் சத்யராஜ், தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகரான நாகர்ஜுனா, கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் உபேந்திரா, மலையாள திரையுலகின் பிரபல நடிகர் செளபின் சாஹிர் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ருதி ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ரஜினி ரசிகர்களுக்கு விருந்தா?
இந்த படம் முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக தனது படத்தில் போதைப் பொருள் கடத்தலை மையமாக கொண்டு லோகேஷ் கனகராஜ் திரைக்கதையை தனது முந்தைய படங்களான கைதி, மாஸ்டர், லியோவில் அமைத்திருப்பார். ஆனால், இந்த படத்தில் அவர் தங்கக்கடத்தலை மையமாக கொண்டு அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ரஜினிகாந்த் இந்த படத்தில் பாசமிகு தந்தையாகவும் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின்ராஜ் எடிட் செய்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2ம் பாகத்தில் தனது முழு கவனத்தைச் செலுத்தி வருகிறார்.