ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ஹூக்கும் இன்று அதாவது ஜூலை 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இப்பாடல் முழுக்க முழுக்க ரஜினியை மைய்யப்படுத்தியும், சண்டைக்காட்சிகளுக்காக உருவாக்கப்பட்ட பாடல் எனவும் கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் என மிக பெரிய திரை பட்டாளம் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு படக்குழு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதால் அது, ரசிகர்களை உற்சாகம் அடைய செய்தது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் முழுமையாக நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்த சமயத்தில் இயக்குனர் நெல்சன் தனது ஜாலியான ஸ்டைல் வீடியோ மூலம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'காவாலா' பாடலை வெளியிட்டார். அப்பாடல் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வெளியான சிறிது நேரத்திலேயே பல லட்சம் லைக்ஸ்களை யூடியூபில் குவித்தது. பலர் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பாடலில் வரும் நடனமாடி பதிவிட்டு வருகின்றனர்.
காவாலா படலில் ரஜினி தனி லுக்கில் வேற லெவலில் இருந்தாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தமன்னாதான். ஆனால் ஹூக்கும் பாடல் முழுக்க முழுக்க ரஜினியை மைய்யப்படுத்தியதாகவும், சண்டைக் காட்சியை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றது. விரைவில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.