ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் 5வது நாளில் அப்படம் எவ்வளவு வசூலைப் பெற்றது என்பதை காணலாம். 


பாக்ஸ் ஆபீஸில் மிரட்டும் ஜெயிலர் 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் ரசிகர்களை கவரவில்லை. இதனால் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து ரஜினி படங்கள் வெளியாகவுள்ளது. அந்த வகையில் அவரின் 169வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.  


 சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, தமன்னா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் என பலரும் நடித்துள்ள ஜெயிலர் படம் வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிகுவித்து வருகிறது. 


தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகள் 


ஜெயிலர் படத்தின் கதை ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்த கதை தான் என்றாலும், நெல்சனின் திரைக்கதை, ரஜினியின் ஸ்டைல், அனிருத்தின் இசை என அனைத்தும் படத்தை கொண்டாட வைக்க காரணமாக அமைந்துள்ளது. முன்னதாக பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற  படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் ரசிகர்களும் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். 


ஜெயிலர் படம் ரிலீசாகி இதுவரை 5 நாட்கள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இந்த 5 நாட்களுக்கு ஒவ்வொரு தியேட்டரும் அதிகப்பட்சம் ஒரு ஸ்கிரீனில் 6 காட்சிகள் திரையிட்டுள்ளன. எல்லா காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியான நிலையில், இன்று சுதந்திர தின விடுமுறை என்பதால் ஜெயிலர் படம் வசூலை அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. 


5 நாட்கள் கலெக்‌ஷன்


இந்நிலையில் ஜெயிலர் படம் 5 நாட்களில் உலகளவில் ரூ.350 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் கிட்டதட்ட ரூ.170 கோடிக்கும் மேல் ஜெயிலர் படம் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே தமிழ் சினிமாவின் அத்தனை வசூல் சாதனைகளையும் தகர்த்தெறிந்த ஜெயிலர் படம் நிச்சயம் புதிய மைல்கல்லை படைக்கும் என ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர். 


மேலும் படிக்க: Independence Day Movies: சுதந்திர தின சிறப்பு திரைப்படங்கள்.. உங்க ஃபேவரைட் படம் இருக்கான்னு பாருங்க..!