பசங்க, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு மாப்பிள்ளை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதியப்படத்தின் வேலைகள் அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


முன்னதாக, சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பது படத்தின் முதல் காட்சி முடிந்ததுமே தெரிந்தது. சமூக வலைதளங்களிலும் படம் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில், இந்தப் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட, ரஜினி இன்னொரு படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நடித்துக் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது




முன்னதாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான  ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்டப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி படத்தை இயக்க பாண்டியராஜ்ஜை கமிட் செய்துள்ளதாக தெரிகிறது. 


மேலும் படிக்க:






Thalapathy 66 | ’தளபதி 66-இல் ஆக்‌ஷன் கம்மி..Full செண்டிமெண்ட் : சர்ப்ரைஸ் அப்டேட்ஸுக்கு இதைப்படிங்க..!#Thalapathy66 #Vijayhttps://t.co/qZMq3x7vRV


— ABP Nadu (@abpnadu) November 24, 2021













மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண