’ஜெயிலர்’  படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது. 




 


கடந்தாண்டு தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த  ‘அண்ணாத்த’ படம் வெளியானது. இதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க நெல்சன் இயக்கிய  ‘பீஸ்ட்’ படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகியிருந்தது. இந்த படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே ரஜினியும் நெல்சனும் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியானது.


 


                                       


இதனிடையே ‘பீஸ்ட்’ படமானது தோல்வியை சந்தித்த நிலையில் ரஜினியுடன் அவர் இணைவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் ட்விட்டர் பக்கத்தில் ‘தலைவர் 169’ அப்டேட் செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நெல்சன்.  


 






இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். அதேபோல் தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக கன்னட பிரபல நடிகர் சிவராஜ் சிவகுமாரும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  


 






இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டு, சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அவ்வப்ப்போது படப்பிடிப்பில் இருந்து போட்டோ மற்றும் வீடியோக்கள் கசிந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு போட்டோ வெளியாகியிருக்கிறது. அந்த போட்டோவில் நடந்து வந்து கொண்டிருக்கும் ரஜினி அவருக்கே உரித்தான ஸ்டைலில் வணக்கம் சொல்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.