ஜெயிலர் 2
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது
நெல்சன் ரஜினி காம்போவில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிபெற்றது. உலகளவில் இப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்தது. இதே கூட்டணியில் ஜெயிலர் 2 படத்தை லாக் செய்தது சன் பிக்ச்சர்ஸ்.
ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு டீசரை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளது. நெல்சனின் ஸ்டைல் ரஜினியின் மாஸ் என இந்த டீஸர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.