இந்த படத்திற்கா 450 கோடி..கேம் சேஞ்சர் படத்தை கிழித்த பிரபல இயக்குநர்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தை விமர்சித்து பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா பதிவிட்டுள்ளார்

Continues below advertisement

கேம் சேஞ்சர்

ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கின் உச்ச நட்சத்திரம் ராம் சரண் நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். இந்த பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியது. கியாரா அத்வானி , எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார். சுமார் 450 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

கேம் சேஞ்சர் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வெளியாகியுள்ளன. இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வெற்றிபெறாத நிலையில் இந்த படத்தில் ஷங்கர் கம்பேக் கொடுப்பார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் முதல் நாளில் கேம் சேஞ்சர்   உலகளவில் ரூ 186 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டது. இந்த தகவல் போலியானது என படத்தின் தயாரிப்பாளரை தில் ராஜூவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள் 

கேம் சேஞ்சர் படத்தை கிழித்த ராம் கோபால் வர்மா

கேம் சேஞ்சர் படத்தை கடுமையாக திட்டி பிரபல தெலுங்கு மற்றும் இந்தி இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். " கேம் சேஞ்சர் படம் 450 கோடி என்றால் பிரம்மாண்டமாக காட்சிகளுடன் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 4500 கோடியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.  கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் 186 கோடி என்றால் புஷ்பா 2 படம் 1800 கோடி வசூலித்திருக்க வேண்டும். உண்மை நம்பும் படியாக இருக்க வேண்டும் கேம் சேஞ்சர் படத்தைப் பொறுத்தவரை பொய் கூட நம்பும் படியாக இல்லை" என ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Continues below advertisement
Sponsored Links by Taboola