விஜயசாந்தி:


தமிழ் சினிமாவில் இப்போது நடிகை நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் என்று பலர் வலம் வந்தாலும், அவர்களுக்கு முன்னோடியாக தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை விஜயசாந்தி. இவரை ஆக்‌ஷன் ஹீரோயின் என்று கூட கூறலாம். அதனால் தான் நயன்தாராவுக்கு முன்பே கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார், லேடி அமிதாப் என்றெல்லாம் அழைக்கப்பட்டார். 


ரஜினிகாந்த் பட ஹீரோயின்:


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள விஜயசாந்தி, அப்போதே தேசிய விருது பெற்ற நடிகை என்ற சாதனையை படைத்தார். தமிழில் மன்னன் இவருக்கு பேரும் புகழும் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு நிகராக தன்னுடைய நடிப்பை தில்லாக வெளிப்படுத்தி இருப்பார். ரஜினிகாந்தை கன்னத்தில் அறை விட்ட காட்சிகள் எல்லாம், ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் எதிர்ப்புகள் இன்றி ரசித்தனர். அதே போல் ரஜினிகாந்த் 3 முறை விஜயசாந்தி கன்னத்தில் அறைந்திருப்பார் இந்த காட்சிக்கு தியேட்டரே கை தட்டல்களால் குலுங்கியது என கூறப்படுகிறது.




ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகை:


இதே போன்று சரத்குமார், கமல் ஹாசன், சிரஞ்சிவி ஆகிய நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அன்றைய காலகட்டத்திலேயே ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகையாக அறியப்பட்டார். சினிமாவில் உச்சத்திலிருக்கும் போதே சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் சேர்ந்தார். 2009 ஆம் ஆண்டு எம்பியாகவும் ஆனார்.


விஜயசாந்தியின் அரசியல் வாழ்க்கை:


2014 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார். அரசியலில் இருந்து கொண்டே சினிமாவிலும் நடித்து வருகிறார். மற்ற நடிகைகளை போன்று இல்லாமல் உச்சத்திலிருக்கும் போது 1988 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி தற்போது இவருக்கு சுமார் 36 ஆண்டுகள் இவர் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.




குழந்தை பெற்றுக்கொள்ளாததன் காரணம்:


இது குறித்து விஜயசாந்தி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் முதல் முறையாக மனம் திறந்து பேசி இருந்தார். அந்த தகவல் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. "அதில் அவர்....எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், குழந்தைகள் இருந்தால் குடும்பம், சுயநலம் என்று வந்துவிடும். அப்படி சுயநலமாக இருந்துவிட்டால் அரசியலில் ஈடுபட முடியாது. இதையெல்லாம் நான் நினைத்து என்னோட கணவரிடம் குழந்தைகள் வேண்டாம் என்று கூறினேன். அவரும் என்னை புரிந்து கொண்டார். அதனால், நாங்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவில்லை. இவ்வளவு ஏன் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட குடும்பம், குழந்தைகள் இல்லாமல் வாழ்ந்தவர்கள் தானே. எந்தவித சுயநலமும் இல்லாமல் மக்களுக்காக சேவை செய்தார்கள் அல்லவா. அவரைப் போன்று மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதற்காக தான் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். 


இளம் தம்பதிகளுக்கு அட்வைஸ்:


இவர் கூறிய இந்த தகவல் தான் ரசிகர்களை அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது . சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சுயநலமாக யோசிக்கும் மனிதர்கள் மத்தியில், மக்களுக்காக குழந்தையே வேண்டாம் என விஜயசாந்தி முடிவு செய்ததாக கூறியது யாருமே எதிர்பாராத ஒரு முடிவு என்று கூறலாம். மேலும், இப்போதெல்லாம் சினிமாவில் விவாகரத்து அதிகரித்து வருகிறது. ஈகோவை விட்டு விட்டு கணவன் மனைவிக்கிடையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். கணவர் கோபமாக இருந்தால் மனைவி அமைதியாகவும், மனைவி கோபமாக இருந்தால் கணவர் அமைதியாகவும் இருந்துவிட வேண்டும் என குடும்பத்திற்கு தேவையான சில அட்வைசும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.