கூலி பட டிக்கெட் விலை
கூலி படத்திற்கான முன்பதிவுகள் சில நாட்கள் முன்பு தொடங்கின. முன்பதிவுகள் தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் கூலி திரைப்படம் இதுவரை 56 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்து 14 கோடிக்கும் மேல் முன்பதிவுகளில் வசூல் செய்துள்ளது. முன்னதாக விஜயின் லியோ படத்தின் 11 கோடி வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் முந்தை பெரிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது கூலி. இப்படியான நிலையில் பல திரையங்குகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக விலைக்கு கூலி படத்தின் டிக்கெட் விற்கப்படுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
கோயம்புத்தூர் பொள்ளாச்சி தங்கம் திரையரங்கில் 190 மதிப்பிலான கூலி படத்தின் டிக்கெட் 400 ரூபாய்க்கு விற்கப்படுவதை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
அதே போல் கர்நாடகா மாநிலம் பெங்களுரில் ரூ 2000 வரை கூலி படத்தின் டிக்கெட் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு தவிர்த்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கூலி படத்தின் அதிகாலை 6 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகின்றன. பெங்களுரில் முன்பதிவு தொடங்கிய 30 நிமிடத்தில் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகி பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது கூலி. கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கர்ணாடக அரசு உத்தரவிட்ட பின்னும் கூலி படத்திற்கு 500 முதல் 2000 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். படத்தின் பெயர் மட்டும் தான் கூலி ஆனால் இந்த விலையில் கோடீஸ்வரர்கள் தான் படம் பார்க்க முடியும் என நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.