கூலி


லியோ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் கூலி . ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக இருந்து வருகிறது கூலி. கமர்சியல் கிங்கான லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. மேலும் படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் , ஆமீர் கான் , சத்யராஜ் என பலத் துறை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.


கூலி பட ஓடிடி விற்பனை 


ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் அடுத்தடுத்து இரு ரஜினி படங்களை தயாரித்து வருகிறது. ஜெயிலர் படம் , இந்தியா மற்றும் வெளி நாடுகளில் வசூலை குவித்தது இதனால் கூலி படத்திற்கு உலகளவில் பெரிய மார்கெட் இருந்து வருகிறது. கூலி படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் 75 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 






தற்போது கூலி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமமும் பெரிய தொகை ஒன்றுக்கு விற்பனை ஆகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி கூலி படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை ரூ 120 கோடிக்கும் அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. கமலின் தக் லைஃப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதிகப்படியாக 150 கோடிக்கு வாங்கியது. தக் லைஃப் தொடர்ந்து அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள படமாக கூலி படம் அமைந்துள்ளது. 


பட்ஜெட்டில் பாதி வசூல் செய்த கூலி


கூலி படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 280 கோடி என கூறப்படுகிறது. இதன்படி ஓவர்சீஸ் மற்றும் ஓடிடி விற்பனையில் மட்டுமே இப்படம் 195 கோடி வரை ரிலீஸூக்கு முன்பே வசூலித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.