லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியான முதல் வாரத்தில் அதிகப்படியான பார்வையாளர்கள் பார்த்த தமிழ் படமாக கூலி திரைப்படம் சாதனை படைத்துள்ளது
ஏமாற்றத்தை அளித்த கூலி
லியோ படத்திற்கு பின் ரஜினி லோகேஷ் கனகராஜ் கூட்டணி பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உபேந்திரா , நாகர்ஜூனா , ஆமிர் கான் , செளபின் சாஹிர் என பல மொழிகளில் இப்படத்தில் நடிகர்கள் ஒப்பந்தமானார்கள். உலகளவில் இப்படம் மிகப்பெரிய வசூல் ஈட்டும் என எதிர்பார்ப்புகள் குவிந்தன. ஆனால் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது கூலி திரைப்படம். எதிர்பார்த்த வசூலும் வரவில்லை. இந்த ஆண்டு கமலின் தக் லைஃப் மற்றும் ரஜினியின் கூலி என அடுத்தடுத்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். க்ளைமேக்ஸில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காட்சியும் அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகிய இரண்டு அமசங்களை படத்தில் அனைவரும் பாராட்டினார்கள். இப்படியான நிலையில் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது கூலி . திரையரங்கைத் தொடர்ந்து ஓடிடியில் படம் பார்த்தவர்களும் படத்தை விமர்சித்தார்கள்
விமர்சனத்திற்கு மத்தியிலும் சாதனை
பல விமர்சனனங்களை எதிர்கொண்டாலும் கூலி திரைப்படம் ஓடிடியில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை ஓடிடியில் வெளியான எந்த ஒரு தமிழ் படத்தைவிடவும் முதல் வாரத்தில் அதிகப்படியான பார்வையாளர்கள் இந்த படத்தை பார்த்துள்ளார்கள். ஒரே வாரத்தில் கூலி படத்தை இதுவரை 4.7 மில்லியன் அதாவது 47 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். இதற்கு முன்பு ஜெயிலர் திரைப்படம் அதிகபேர் பார்த்த படமாக முதலிடத்தில் இருந்தது.
ஜெயிலர் 2
அடுத்தபடியாக ரஜினி நெல்சன் திலிப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மோகன்லால் , ரம்யா கிருஷ்ணன் , வித்யா பாலன் , பாலையா ,ஷிவராஜ்குமார் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.