மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் துல்கர் சல்மான். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இவர் உள்ளார். இவரது தயாரிப்பு நிறுவனம் வேஃபேரேர் ப்லிம்ஸ் தயாரிப்பில் கடந்த 28ம் தேதி வெளியான திரைப்படம் லோகோ.

லோகா வசூல் வேட்டை:

கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள சூப்பர்ஹீரோ திரைப்படம். 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூபாய் 245 கோடி வரை வசூலை குவித்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தை அதிர வைத்துள்ளது. 

பணம் போச்சு என நினைத்த துல்கர் சல்மான்:

இந்த படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ஒரு தயாரிப்பாளராக லோகா படத்தால் நாங்கள் பணத்தை இழந்துவிட்டோம் என்றே நினைத்தோம். இந்த படம் நல்ல படம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், படத்தின் பட்ஜெட் மிகவும் அதிகம். படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வரும்போது லாபம் வரும் என்று நினைத்தோம். ஆனால், இந்த வெற்றி நினைத்துக்கூட பார்க்காத வெற்றியாகும் என்று தெரிவித்துள்ளார். 

பெரிய கதாநாயகியாக இல்லாமல் சாதாரண வளர்ந்து வரும் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாக லோகா இருந்ததால் இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை. டோம்னிக் அருண் இயக்கியுள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த படம் மொத்தம் 5 பாகங்களை உள்ளடக்கியது ஆகும். 

மலையாள திரை வரலாற்றில் மைல்கல்:

மலையாள திரை வரலாற்றில் அதிகளவு வசூல் செய்த இரண்டாவது படம் என்ற வரலாற்றையும் லோகா படைத்துள்ளது. இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷனுடன், நஸ்லீன், சான்டி மாஸ்டர், அருண் குரியன் உள்பட ஏராளமான பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

நிமிஷ் ரவி இந்த படத்தை இயக்கியுள்ளார். சமன் சாக்கோ இந்த படத்தை எடிட் செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சான்டி வில்லனாக மிரட்டியிருப்பார். இந்த படம் மொத்தம் 5 பாகங்களை கொண்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இதன் எஞ்ஜிய பாகங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் தரும் திரையுலகங்களில் ஒன்றாக மலையாள திரையுலகம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது லோகாவும் இணைந்துள்ளது. அடுத்தடுத்த பாகங்களில் இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் லோகா யுனிவர்சில் இணைய உள்ளனர்.