கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் , உபேந்திரா , செளபின் சாஹீர் , ஆமீர் கான் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கூலி படத்தின் சிறப்பு அப்டேட் வெளியிட்டுள்ளது படக்குழு
அனிருத் இசையமைத்து அறிவு பாடியுள்ள சிகிடு என்கிற பாடலின் குட்டி க்ளிம்ப்ஸ் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினி தனது ஸ்டைலில் சில டான்ஸ் மூவ்ஸை இறக்கிவிடுகிறார். ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அப்டேட் கொடுத்துள்ளது கூலி படக்குழு