Super Star: ’சூப்பர் ஸ்டார்-னா அது ரஜினி சார் மட்டும் தான். அவர்கிட்ட எதுக்கு போட்டி போடுறீங்க’ என இயக்குனரும், நடிகருமான ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். 


தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளாக வலம் வரும் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார். கமர்ஷியல் மற்றும் ஆக்‌ஷன் படங்களை கொடுத்த ரஜினி மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். பாக்ஸ் ஆபிசிலும் ரஜினியின் படங்கள் வசூலை வாரி குவித்து வருகின்றன. என்றென்றும் எவர் கிரீன் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பற்றிய சர்ச்சை அவ்வபோது எழுந்து வருகிறது. 


ரஜினி சொன்ன குட்டி கதை


நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம்  வரும்  10ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான ட்ரெயிலர், காவாலா, ஹுக்கும், ஜுஜுபி ஆகிய பாடல்கள் வெளியாகி மாஸ் ஹிட் அடித்தன. இந்த நிலையில் கடந்த வாரம் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பங்கேற்ற ரஜினியின் பேச்சு வைரலானது.


விழாவில் ரஜினி சொன்ன ‘காகம்-பருந்து’ உடைய குட்டி ஸ்டோரி இணையத்தில் டிரெண்டானது. சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டுமென ஆசைப்படும் நடிகர்களுக்கும் குட்டி ஸ்டோரியை ரஜினி கூறியதாக ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். முன்னதாக சூப்பர் ஸ்டார் பெயரை விஜய்க்கு வைத்து ரசிகர்கள் ட்ரோல் செய்ததற்கு கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன. சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு பதிலடியாக ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடலில் “பெயர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு, குட்டிச்செவத்த எட்டி பாத்தா, உசுர கொடுக்க கோடி பேரு” என்ற வரிகள் இடம் பெற்றன. 


சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி மட்டும் தான்


இந்த நிலையில், இயக்குனரும், நடிகருமான ரமேஷ் கண்ணா ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என பேசி உள்ளார். அண்மையில் அவர் அளித்த நேர்க்காணல் ஒன்றில், விஜய்யை சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறதே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரமேஷ் கண்ணா, ”சூப்பர் ஸ்டார்ன்னா ரஜினிகாந்த் ஒருத்தர் தான். சும்மா அவருக்கிட்ட எதுக்கு போட்டி போடுறீங்க. அவரை அடிக்கயெல்லாம் ஆளே கிடையாது. அவர் இன்னைக்கும், என்னைக்கும் சூப்பர் ஸ்டார் தான். நீங்க வேண்டுமானால், அல்டிமேட் ஸ்டார், மெகா ஸ்டார்ன்னு பேர் வச்சுக்கோங்க. சூப்பர் ஸ்டார்ன்னா அது ரஜினிகாந்த் மட்டும் தான்” என்றார்.






மேலும் படிக்க: Kanguva: அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு... கங்குவா திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் வெற்றி செய்திருக்கும் மேஜிக்!