தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” படத்தில் முழுவீச்சில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோரும் நடித்து வருவதால் படம் குறித்து எதிர்பார்ப்பு இப்போதே எகிற தொடங்கியுள்ளது.
மேலும் ஜெயிலர் படம் 2023 ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரஜினி 170 படங்களோடு நடிப்பை நிறுத்திக் கொள்வார் என்ற தகவலெல்லாம் வெளியானது. இதில் கடைசி படத்தை அவரது இரு மகள்களும் இணைந்து இயக்குவார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்பது போல ரஜினி எனர்ஜெட்டிக்காக ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாகவும், அந்த இரண்டு படங்களை லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன் தயாரிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் ஒரு படத்தை டான்" பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும், இன்னொரு படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயிலர் படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்.அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது இத்தகவலை லைகா தலைமை நிர்வாகி தமிழ் குமரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 2.0., தர்பார் ஆகிய படங்கள் வெளியான நிலையில் காலா படத்தை தியேட்டர் உரிமையை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.