இந்த ஆண்டு கமல் நடித்த தக் லைஃப் மற்றும் ரஜினி நடித்த கூலி ஆகிய இரு படங்களும் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் வெளியான கூலி திரைப்படம் பரவலாக நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றதால் ரஜினி மற்றும் கமல் இணைந்து அதிரடி முடிவு எடுத்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 46 ஆண்டுகள் கழித்து  ரஜினி கமல் இணைந்து நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி கமல் 

அபூர்வ ராகங்கள் தொடங்கி  மூன்று முடிச்சு , அவர்கள் , தப்பு தாளங்கள் , என ரஜினி கமல் இணைந்து பல்வேறு மொழிகளில் 21 படங்களில் நடித்துள்ளார்கள். கொரோணாவுக்கு முன்பே ரஜினி கமலை இணைத்து இயக்கும் பேச்சுவார்த்தை நடந்துவந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார் . இரு நடிகர்களின் பிஸியான பணிச்சூழலில் இந்த படத்தை எடுப்பது சாத்தியமற்றது என்பதால் இந்த ஐடியாவை கைவிட்டார் லோகேஷ். அதேபோல் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிக்க திட்டமிருப்பதாக கமல்ஹாசனும் தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு   தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களான கமல் ரஜினியின் இரு படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. இதனை ஈடு செய்யும் வகையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி கமல் இணைந்து நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தள்ளிப்போகுமா கைதி 2 படப்பிடிப்பு

கூலி படத்திற்கு அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் கார்த்தி அடிக்கும் கைதி 2 படத்தை இயக்கவிருந்தார் . ட்ரீம் வாரியர்ஸ் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு லோகேஷ் ரூ 75 கோடி சம்பளம் பேசியிருந்ததாகவும் தற்போது கூலி படத்தின் விமர்சனங்களுக்குப் பின் அவரது சம்பளத்தை ரூ 65 கோடியாக குறைப்பதற்கான பேச்சுவாத்தை நடந்து வருவதாகவும் இதனால் கைதி படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும்  கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் . 

Continues below advertisement