பணம் திருப்பி தராததால் தாக்குதல்

Continues below advertisement

சென்னை வியாசர்பாடி பி.வி காலனி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் ( வயது 30 ) வழக்கறிஞரான. இவர் மீனாம்பாள் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரவிந்த் என்பவர் தினேஷ் குமாரிடம்  பணம் கேட்டுள்ளார். தினேஷ் குமார் என்னிடம் பணம் இல்லை எனக் கூறவே அவரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த 600 ரூபாய் பணத்தைப் பறித்து சென்றுள்ளார். தினேஷ்குமார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஜாமீனில் எடுக்காததால் ஆத்திரம்

Continues below advertisement

கொடுங்கையூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் , வியாசர்பாடி சி - கல்யாணபுரம் மெயின் தெரு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ( எ )டைகர் அரவிந்த் ( ( வயது 32 ) என்ற ரவுடி இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை யடுத்து டைகர் அரவிந்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் குற்ற வழக்கு ஒன்றில் அரவிந்த் கைதாகி சிறைக்குச் சென்ற போது வழக்கறிஞரான தினேஷ் குமாரிடம் ஜாமீனில் எடுப்பதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

ஆனால் தினேஷ் குமார் அரவிந்தை ஜாமினில் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வேறு ஒரு வழக்கறிஞர் மூலம் அரவிந்த் ஜாமினில் வெளியே வந்து தான் கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைக் கேட்டு வழக்கறிஞர் அரவிந்தை தாக்கியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அரவிந்த் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மனைவி மீது சந்தேகப்பட்டு , கத்தியால் வெட்ட முயன்ற கணவன்

சென்னை ஓட்டேரி மங்களபுரம் கிருஷ்ணதாஸ் சாலை நான்காவது தெருவை சேர்ந்தவர் கர்ணன் ( வயது 53 ) இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. சுமதி ( வயது 44 ) என்ற மனைவியும் ஹரிணி ( வயது 23 ) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் , குடிபோதையில் வீட்டிற்கு வந்த கர்ணன் தனது மனைவியை சந்தேகப்பட்டு தொடர்ந்து அவதூறான வார்த்தைகளால் பேசி சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த சிறிய கத்தியை எடுத்து தனது மனைவியை வெட்ட சென்றுள்ளார். அப்பொழுது இவர்களது மகள் ஹரிணி என்பவர் தடுத்ததில் ஹரணிக்கு முழங்கையில் பலத்த வெட்டுக்ாகாயம் விழுந்தது.

கையில் - 15 தையல்கள் 

அக்கம் பக்கத்தினர் அவரை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டு கையில் சுமார் 15 தையல்கள் போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சுமதி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கர்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.