எஸ்.எஸ் ராஜாமவுலியின் வாரணாசி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படம் ஆங்கில படம் ஒன்றின் காப்பி என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

வாரணாசி வெளியீட்டு தேதி:

எஸ்.எஸ். ராஜமௌலி தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாரணாசி படத்தின் வெளியீட்டு தேதி போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார். ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பிறகு அவர் இயக்கும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு  எழுந்த்துள்ளது. இப்படத்தில் மகேஷ் பாபு, மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படமானது அடுத்த் ஆண்டு ஏப்ரல் 7, 2027 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்பதை இன்று அறிவித்தார். 

ஆங்கில படத்தின் காப்பியா?

போஸ்டர் ரசிகர்களை சிலிர்க்க வைத்தாலும், அந்த போஸ்டரே எதிர்பாராத ஆன்லைன் விவாதத்தைத் தூண்டியது. வாரணாசி போஸ்டருக்கும் 1998 ஆம் ஆண்டு ஹாலிவுட் படமான Deep Impact-ன் போஸ்டரும் ஒத்து போவதால் அந்த படத்தின் காப்பி என்று பேசத்தொடங்கியுள்ளனர். இந்த திரைப்படம் மிமி லெடர் இயக்கத்தில் ராபர்ட் டுவால், டியா லியோனி, எலிஜா வுட், வனேசா ரெட்கிரேவ், மாக்சிமிலியன் ஷெல் மற்றும் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நடித்தனர்.

Deep Impact-ன் கதை என்ன?

பூமியின் மீது வால் நட்சத்திரம் மோதவிருப்பதை மையமாகக் கொண்ட 'டீப் இம்பாக்ட்' படத்தின் விளம்பர போஸ்டரில், பூமிக்கு மேலே ஒரு பிரம்மாண்ட விண்பொருள் தெரிவது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. 'வாரணாசி' படத்தின் போஸ்டரும் அதே போன்ற விண்வெளி சார்ந்த காட்சி அமைப்பைக் கொண்டிருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறது.

'வாரணாசி' படத்தின் கதைக்களம் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், போஸ்டரில் உள்ள விண்வெளி சார்ந்த காட்சிகள், இந்தப் படம் விண்வெளி அல்லது வானியல் நிகழ்வுகள் தொடர்பான கதையாக இருக்கலாம் என்ற யூகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி ஒற்றுமையானது, போஸ்டர் வடிவமைப்பு வெறும் உத்வேகமா அல்லது அப்பட்டமான காப்பியா என்ற விவாதத்தை சமூக வலைத்தளங்களில் கிளப்பியுள்ளது.