விகடனுக்கு அளித்த நேர்காணலில், ராஜமெளலி சொன்ன ஒரு சூப்பரான விஷயம் என்னன்னு தெரியுமா?

Continues below advertisement

இயக்குநர் ராஜமௌலி உருவாக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். கூட்டணியில் உருவாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அண்மையில் தமிழில் பேட்டியளித்திருந்த ராஜமௌலி 

‘தமிழில் ஆர் ஆர் ஆர் மாதிரி படம் எடுக்க வேண்டும் என எனக்குத் தோன்றினால் அதற்கு எப்பவுமே என் சாய்ஸ் ரஜினி மற்றும் கமல்தான். ரஜினி ஹீரோ, கமல் வில்லன் அல்லது கமல் ஹீரோ ரஜினி வில்லன்.’ என்றார்.

Continues below advertisement

பேட்டியில் அவருடன் பங்கேற்ற ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் படத்தின் ஸ்டண்ட் பகுதிகள் பற்றி ஜாலியாகப் பேசினர். அதில்,’நானும் சரணும் ரொம்ப கடினமான ஸ்டண்ட் எல்லாம் ஈசியா செய்தோம்.ஆனால் ரெண்டு அடி மேடையில் இருந்து கீழே விழுந்து பல் உடைந்திருக்கு. ரொம்ப மோசமா அடிபட்டுப்போம்’ எனப் பேசினார்.

பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி கையில் எடுத்திருக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு  இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக இப்படம் தயராக இருக்கிறது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.  ஆர்.ஆர்.ஆர்.இன் முதல் நாள் காட்சி முடிந்துள்ள நிலையில், டிவிட்டர் பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.