Just In





RRR Glimpse | வெளியானது RRR படத்தின் Glimpse! மெய் சிலிர்க்க வைக்கும் 45 நொடிகள்! வீடியோ உள்ளே..
இது நேற்றே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மறைவால் வெளியீட்டு தேதியை இன்று காலை 11 மணிக்கு படக்குழுவினர் ஒத்தி வைத்தனர் .

உலக சினிமாக்கள் கொண்டாடிய பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி தற்போது எடுத்திருக்கும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படம்தான் ‘ஆர்.ஆர்.ஆர்’ . 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் கிளிம்ஸ் டீசர் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மிரட்டலாக வெளியாகியிருக்கும் அந்த வீடியோ இதோ !
இது நேற்றே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் பபுனித் ராஜ்குமாரின் மறைவால் வெளியீட்டு தேதியை இன்று காலை 11 மணிக்கு படக்குழுவினர் ஒத்தி வைத்தனர் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர்.படத்தின் புரமோஷன் வேலைகளை தற்போது தொடங்கியுள்ள படக்குழு, மாறுபட்ட திரையரங்க அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக பிரபல பி.வி.ஆர் சினிமாவுடம் ஒப்பந்ததிலும் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக வெளியான படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் பாடல்இணையத்தை கலக்கிய நிலையில் தற்போது வெளியாகியுள்ள கிளிம்ஸ் டீஸரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.