சின்னத்திரையின் சூப்பர் ஜோடி என்று அழைப்படுபவர்கள் சஞ்சீவ் - ஆல்யா. இருவருமே நாடகங்களில் நடித்த நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். காதலுக்கு முதலில் எதிர்ப்பை சந்தித்த இந்த ஜோடி பின்னர் இரு வீட்டார் திருமணத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் அன்புக்கு  பாத்திரமாக அவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. 


அய்லா என்று பெயரிடப்பட்ட அந்தக்குழந்தைக்குமே சோஷியல் மீடியாவில் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் சஞ்சீவ் - ஆல்யா ரசிகர்களுக்கு மேலும் ஒரு இனிப்புச் செய்தி கிடைத்துள்ளது. இருவருமே தங்களில் இரண்டாவது குழந்தைக்காக காத்திருப்பதும், ஆல்யா கருவுற்றிருப்பதும்தான் அந்த ஸ்வீட் நியூஸ்.  இந்த செய்தியை சஞ்சீவ் இன்ஸ்டா லைவில் தெரிவித்துள்ளார்.






அவர் நடிக்கும் சீரியலான கயல் சீரியலின் ப்ரமோஷனுக்காக சீரியல் குழுவினர் இன்ஸ்டா லைவில் பேசினார். அப்போது பேசிய சஞ்சீவ், ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ். அய்லா பார்ட் 2 எனத் தெரிவித்தார். இதன் மூலம் ஆல்யா கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். தற்போது ஆல்யா, ராஜா ராணி சீசன் 2 நாயகியாக நடித்து வருகிறார். தற்போது அவர் கர்ப்பிணியாக இருப்பதால் அவரும் விரைவில் நாடகத்தில் இருந்து வெளியேறுவார் எனக் கூறப்படுகிறது.


அப்போது அய்லாவின் தங்கைக்கு பெயர் முடிவு செய்து முடிச்சாச்சா? என கேள்விகள் எழுப்பினர் ரசிகர்கள். கொஞ்சம் பொறுங்க அதையும் சொல்றோம் என்றனர் ஸ்டார் ஜோடி.


ஏற்கெனவே பாரதி கண்ணம்மா நாடகத்தில் இருந்து ரோஷினி வெளியேறவுள்ளார். இந்நிலையில் அவர் சீரியலில் இருந்து வெளியேற போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.ரோஷினிக்கு சில சொந்த காரணங்கள் உள்ளதாகவும் அதனாலேயே சீரியிலில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு நெருக்கமான சிலர் அவருக்கு பிரபல நடிகர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாகவும், அதனால் பாரதி கண்ணம்மா நாயகி தற்போது வெள்ளித்திரையை நோக்கி படையெடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்