Vikram Movie: கமல் பிறந்தாளில் விக்ரம் 100வது நாள் வெற்றி விழா!

Vikram Movie 100th Day Celebration : விக்ரம் படத்தின் 100வது நாள் வெற்றி விழா, உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது

Continues below advertisement

உலக நாயகன் பிறந்தநாளில் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றிக்கொண்டாட்டம் நடைபெறவுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

விக்ரம் ரிலீசுக்கு முன்:

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக அமைந்தது. நாடு முழுவதும் இப்படத்திற்கான விளம்பர பணிகள் நடைபெற்றது. இதுவரையில் எந்த ஒரு தமிழ் நடிகருக்கும் இது போல விளம்பரம் செய்ததில்லை என்ற பேட்டர்னை தவிடு பொடியாக்கினார் கமல்ஹாசன்.

"விக்ரம்" கூட்டணிக்கு கிடைத்த வெற்றி :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன்விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒவ்வொருவரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை வெகு சிறப்பாக செய்து இருந்தார்கள். படத்திற்கு பக்க பலமாய் அமைந்தது இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை. ஏஜென்ட் டினா முதல் நடிகை காயத்ரி வரை அனைவரின் நடிப்பும் மிக மிக சிறப்பு. 

ஓடிடியிலும் டாப் டக்கர்:

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் விக்ரம் படம் வெளியாகி அங்கும் சாதனை படைத்துள்ளது. அதிகமானோர் பார்வையிட்ட திரைப்படம், அதிகமான சந்தாதாரர்கள் மற்றும் அதிக நேரம் பார்க்கப்பட்ட என மூன்று பிரிவுகளில் இப்படம் ஓடிடியிலும் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

விக்ரம் படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் :

வசூலை குவித்த விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கொண்டாடுகிறது .

லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தின் 100வது நாள் வெற்றி விழா, உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.

Continues below advertisement