சீக்காவுக்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கா? ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்த ரகசியம்!

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பற்றி இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பகிர்ந்த ரகசியம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்:

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் செல்லமாக சீக்கா என்று அழைக்கப்படுவார். சென்னையில் பிறந்து வளர்ந்த சீக்கா, 1981 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். தன்னுடைய 21ஆவது வயதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான சீக்கா 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 27 அரைசதங்கள் உள்பட 4091 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 12 அரைசதங்கள் உள்பட 2062 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்கு 4 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். 

Continues below advertisement

தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார். எல்லோரிடமும் வயது வித்தியாசம் இல்லாமல் ஜாலியாக பழகக் கூடியவர். டேய் மச்சி, டே அடிடா, அப்படி அடிடா, இப்படி அடிடா என்று கிரிக்கெட் வீரர்களை பேசுவார். தன்னுடன் வர்ணனை செய்பவர்களை அப்படி தான் அழைப்பார். இவ்வளவு ஏன் இயக்குநரும், நடிகருமான ஆர்ஜே பாலாஜி கூட சீக்கா உடன் இணைந்து பல போட்டிகளுக்கு வர்ணனை செய்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி:

ஆர்ஜே பாலாஜியும் ஜாலியான டைப் தான். கிரிக்கெட் போட்டிகளின் போது அவர்கள் எப்படி கமெண்டரி செய்கிறார்கள், என்ன பேசுகிறார்க என்பதை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளங்கள் உண்டு. அப்படி அவர்கள் கமெண்டரி செய்வது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். இந்த நிலையில் தான் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் பட புரோமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி அவர் இதுவரையில் யாருக்கும் தெரியாத கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பற்றிய ரகசியத்தை கூட பகிர்ந்து கொண்டார்.

சீக்காவின் உதவிகள்:

சீக்கா பற்றி கூறியுள்ள, ஆர்.ஜே.பாலாஜி அவருடைய வீட்டில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளின் படிப்பிற்கு அவர் பல உதவி செய்துள்ளாராம். தன் வீட்டில் வேலை செய்பவர்கள் போல் அவர்கள் அடிமட்டத்தில் இருந்துவிட கூட து என எண்ணி தான் அனைவரின் படிப்பு செலவையும் இவர் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இவர் படிக்க வைத்த பிள்ளைகள் பலர்,  இப்போது வெளிநாட்டில் கை நிறைய சம்பளத்தோடு வேலை செய்கிறார்களாம். 

சீக்கா செய்த நன்றியை ஒருபோதும் மறவாத, அவர்கள் தற்போது வரை அவருடைய வீட்டில் தான் பணிபுரிந்து வருகிறார்களாம். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அவர் மீது அவர்கள் வைத்து அன்பும், பாசமும், தான். சீக்காவும் அவர்களை ஒரு வேலை ஆட்களாக பார்க்காமல், தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் போல் தான் பாவிப்பாராம். சீக்காவின் மறுபக்கம் கேட்பவர்களையே பிரமிக்க வைத்துள்ளது.

சூர்யாவை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி 

தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா45 படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. கோவையிலுள்ள மாசாணி அம்மன் கோயிலில் வைத்து சூர்யா 45 படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது. அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola