அனிகா சுரேந்திரன்:
கெளதம் மேனன் இயக்கத்தில், அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இந்தப் படத்தில் அஜித் மற்றும் த்ரிஷாவிற்கு மகளாக நடித்திந்தார். அதன் பிறகு நானும் ரௌடி தான், மிருதன், மாமனிதன் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு, 'விஸ்வாசம்' படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானார்.
ஹீரோயினான அனிகா:
18 வயதை கடந்த பின்னர் ஹீரோயின் வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கும் அனிகா, அடிக்கடி சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி பட வாய்ப்புகளை தேடி கொண்டிருக்கிறார். தெலுங்கில் 'புட்ட பொம்மா' மற்றும் மலையாளத்தில் 'ஓ மை டார்லிங்' என இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், தற்போது தனுஷ் இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்' என்கிற படத்திலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து வெயிட்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் அனிகா சுரேந்தரன், கடைசியாக தமிழில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'பிடி சார்' படத்தில் முக்கியமான ரோலில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஹீரோவாக ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்க, காஷ்மிரா பர்தேசி ஹீரோயினாக நடித்திருந்தார், பிரபு, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், இளவரசு, தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பாலியல் சீண்டல்கள் குறித்து பேச்சு:
'பிடி சார்' திரைப்படம் மாணவிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. கதை மிகவும் அழுத்தமானதாக இருந்தாலும், படத்தை கொண்டுசென்ற விதம் சலிப்பு தட்டியதால் படம் பாக்ஸ் ஆபிசில் வெற்றியை தவற விட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில், இப்படத்தில் போல்டான வேடத்தில் நடித்திருந்த அனிகா, தான் கேள்விப்பட்ட சில விஷயங்கள் குறித்து பேசி இருந்தார்.
அதாவது, "மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள் மற்றும் பேருந்துகளில் பெண்களை சிலர் கண்ட இடத்தில தொடுவார்கள். டார்ச்சர் செய்வார்க என்று நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு அப்படி எதுவும் நடந்தது இல்லை. நான் எப்போதுமே என்னுடைய அம்மாவோடு தான் இருப்பேன் என பேசி இருந்தார். சில பெண்கள் தாங்கள் சந்திக்கும் மோசமான சம்பவங்களால், மனதளவில் உடைத்து போகிறார்கள். அவர்களுக்கான விழிப்புணர்வாக தான் இந்த படத்தில் நான் நடித்தேன் என தெரிவித்திருந்தார். அனிகா கூறிய இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.