பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சினிமாவுக்கு நுழைந்தவர் நடிகை ரைசா வில்சன். இந்த நிகழ்ச்சி இவருக்கு கொடுத்த புகழின் காரணமாக யுவன் தயாரிப்பில் 'பியார் பிரேமா காதல்' படத்தில் ஹரீஸ் கல்யாணுடன் ஹீரோயினாக நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தமிழில் சில படங்களில் ஹீரோயினாக கமிட்டானார் ரைசா. இவரது நடிப்பில் தற்போது 'சேஸ்' திரைப்படம் ரிலீஸாக காத்திருக்கிறது.
தொடர்ந்து, ரைசா தன்னுடைய பழைய அழகுடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்து வந்தார். எப்போதும் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்களை பதிவு செய்யும் ரைசா பிகினி உடையில் இருக்கும் படங்களையும் பதிவு செய்து வருவதும் வழக்கம். இதே போல் சில தினங்களுக்கு முன்பு இவர் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்துக்கு பலரிடமிருந்து சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் வர தொடங்கியது.
''முதலில் துப்பட்டாவை போடுங்கள் என்றார்கள். பட வாய்ப்புக்காக இந்த அளவுக்கு தரக்குறைவாக நடந்து கொள்வதா என்று ரீதியில் கமெண்ட்ஸ் பதிவு செய்திருந்தனர். இதை கவனித்த ரைசா இவர்களுக்கு தகுந்த பதில்களையும் வெளியிட்டார். மேலும், என்னுடைய புகைப்படங்கள் பிடிக்கவில்லை என்றால், 'எனை பின் தொடர வேண்டாம்' எனவும் கூறியிருந்தார். போட்டோ போடுவது எனக்கு பிடித்த செயல் என்ற ரீதியில் ரைசாவின் பதில்கள் இருந்தன.
மேலும், ரைசாவுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது போலவே சில பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்திருந்தன. இதற்காக சந்தோஷப்பட்ட ரைசா போலியான அக்கவுண்ட்டில் இருந்து வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் போன்றவங்களை கண்டுகொள்வதில்லை எனவும் தெரிவித்திருந்தார். முகத்திற்கு நேராக பேசமால் இப்படி கமெண்ட்ஸ் அளிப்பது வருத்தப்பட வைப்பதாகவும் கூறியிருந்தார். இன்று என்னை தரகுறைவாக பேசுபவர்கள் நாளைக்கு மற்றொரு நபரை பேசுவார்கள் எனவும் ரைசா வில்சன் கூறியுள்ளார்.