ரயில் தண்டவாளத்தின் மீது அமர்ந்து இன்ஸ்டா ரீல்ஸ் ஷுட் செய்த சல்மான் கான் போல்  இருக்கும் நபர் மீது ரயில்வே பாதுகாப்பு படை வழக்கு  பதிவு செய்துள்ளது.


பாலிவுட் பிரபலம் சல்மான் கானின் தீவர ரசிகர் அசாம் அன்சாரி. சல்மான் கான் மீதுள்ள அன்பால் அவரை போலவே முழு உருவத்தையும்  மாற்றி வாழ்ந்து வருகிறார். அசாம் அன்ஸாரி என்பவர் லக்னோவில் உள்ள ரயில் தண்டவாளத்தை  நோக்கி நடந்து வந்து, பின் கீழே அமர்ந்து சிகரேட் ஒன்றை புகைக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும்






இவர் மீது ரயில்வே அதிகாரிகள் 147, 145, 167 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கூடிய விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம் அன்ஸாரி மீது வழக்கு செலுத்தபடுவது இது முதன் முறை கிடையாது.  இதற்கு முன்னரே லக்னோவில் உள்ள பொது இடத்தில் கூடிய மக்களை தொந்தரவு செய்யும் வகையில் ரீல்ஸ் செய்துள்ளார் இந்த இன்ஸ்டா மன்னன். அவ்வப்போது இவர் போஸ்ட் செய்யும் வீடியோக்கள் வைரலாவதும் உண்டு.






நம்ம ஊரில் இருக்கும் கார்த்தி திவ்யா , வணக்கம் மாப்ள அருண், ஜி.பி முத்து, வணங்கமுங்கோ ஷீலா ஆகியோர் செய்யும் வேடிக்கையான விஷயங்கள் போல் வட மாநிலங்களில் பலரும் செய்துவருகின்றனர்  என்பதை உணர்த்துகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது  ஊருக்கு ஒருத்தன் கிளம்பி விட்டான் என்றுதான் தோணுகிறது. வேடிக்கையான விஷயங்கள் செய்யும் போது மற்றவர்களை தொந்தரவு செய்யாமலும் அசட்டுத்தனமான க்ரிஞ் செய்யாமலும் இருந்தால் நன்றாக இருக்கும்.