நடிப்பு ராட்சசன், பன்முகக் கலைஞன், வில்லத்தனத்தால் மக்களை முழுமையாக ஆக்கிரமித்த உலகத்தர நடிகர் ரகுவரனின் பிறந்தநாள் இன்று. 


 



நடிப்பின் மீது அளவு கடந்த பற்றும், தீராத காதலும் இருந்தால் மட்டுமே ஒருவரால் ஒரு கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி அதை திரையில் வெளிப்படுத்தி பார்வையாளர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். அப்படி ஒரு கலைஞனாக விளங்கிய நடிகர் தான் ரகுவரன். தன்னுடைய மறைவிற்கு பிறகு அவரின் இழப்பை ஈடு செய்ய யாராலும் முடியாத அளவிற்கு பெஞ்ச் மார்க் செட் செய்தவர். 


நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் ரகுவரன் என்பதை அவரின் நடிப்பே வெளிப்படுத்திவிடும். ஆனால் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அவர் கொடுத்த பதில் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நடிகர் ரகுவரனின் ஃப்ளாஷ்பேக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக அவரின் பிறந்தநாளான இன்று பகிரப்பட்டு வருகிறது. 


 



நடிகர் ரகுவனிடம் "வாழ்க்கையில் பண்ண பெரிய தப்புனா என்னனு நினைக்கறீங்க?" என இந்த வீடியோவில் கேட்கப்படுகிறது. அனுஹாசன் தொகுத்து வழங்கிய காஃபி வித் அனு நிகழ்ச்சியில் இந்தக் கேள்வி கேட்கப்பட்ட நிலையில், இதற்கு நீங்கள் மிகவும் உண்மையாக பதில் அளிக்க வேண்டும் எனக் கேட்கப்படுகிறது.


இந்நிலையில் "நான் நடிகன் ஆனதை தான் நான் செய்த பெரிய தப்பாக நினைக்கிறேன். ஏன் என்றால் இதை விட ரொம்ப சந்தோஷமா சின்ன ஒரு நிலத்தில் பயிரிட்டு அதன் மூலம் வரும் பயிரை மார்க்கெட்டுக்கு சுமந்து சென்று அதில் இருந்து வரும் பணத்தை வைத்து கூழோ, கஞ்சியோ குடிச்சு நிம்மதியா படுத்து தூங்கி ஆண்டவனிடம் “வெயில் அடிக்குதே மழை வரணும்பா” என பயிரைப் பார்த்து கொண்டே நிம்மதியா இருக்கணும்


கோழி, ஆடு, நாய்களை வளர்த்துக்கிட்டு அவங்களுக்கு எல்லாம் சாப்பாடு போட்டு வளர்க்கணும். நமக்கு ஒத்தாசைக்கு வேணும்னா ஒரு ஆளை வைச்சுக்கணும் அவ்வளவு தான். அதுதான் லைஃப்"  என தன்னுடைய மனதுக்குள் மிகவும் ஆசைப்பட்ட கனவு வாழ்க்கையை பற்றி மிக அழகாக பகிர்ந்து இருந்தார் ரகுவரன். 


 




 நடிகர் ரகுவரன் நடிப்பு பலருக்கும் ஒரு உதாரணமாய் இருக்கும் வேளையில், அவரின் விருப்பம் என்னவோ மிகவும் எளிமையானதாக இருக்கிறது. அவரின் இந்த ஃப்ளாஷ்பேக் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.