நடன இயக்குநராக அறிமுகம் ஆகி தமிழ், தெலுங்கு மொழிகளில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். தமிழ் சினிமாவில் பேய் கதைகள் ஏராளம் வந்து விட்டன. ஆனால், இவர் இயக்கிய முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து காஞ்சனா சீரிஸில் பேய் படங்களை இயக்கி மாஸ் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். பேய் கதைகளில் காமெடியை வைத்து சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது காஞ்சனா 4 படங்களை இயக்கி நடித்து வருகிறார்.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகை நூரா ஃபதேகி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தமிழ் சினிமா மட்டும் அல்ல இந்தி சினிமாக்களில் கூட ஹாரர் படங்களுக்கு தான் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. பேய் கதைகளில் முன்னணி நடிகர்கள் கூட நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது காஞ்சனா 4 படத்தில் சென்சேஷனல் ஹீரோயின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகும் காஞ்சனா 4 படத்தில் பேய் கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் படக்குழு பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புஷ்பா படத்தின் மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. இந்தியாவின் கிரஷ் என்று புகழப்பட்டவர், சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி மொழியில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் 1000 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்திருக்கிறது. அதனடிப்படையில் காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா பேய் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளதாகவும், அதற்கும் தயாரிப்பு நிறுவனம் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.