சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வினீத், மாளவிகா, வடிவேலு , நாசர் என ஒரு பெரிய திரை பட்டாளம் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் "சந்திரமுகி". இப்படத்தை இயக்குனர் பி. வாசு இயக்கி இருந்தார். தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், ரவி மரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு இசையமிக்க உள்ளார் எம்.எம். கீரவாணி.
சந்திரமுகி 2 புதிய லுக்:
சந்திரமுகி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை தற்போது போஸ்ட் செய்துள்ளார். சந்திரமுகி 2 படத்திற்காக லாரன்ஸ் பாடி பில்லடிங் செய்து தனது உடலை கட்டுமஸ்தானாக உயர்த்தியுள்ளார். இதற்கு மிகவும் உறுதுணையாய் இருந்த சிவா மாஸ்டருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எனக்கு வேண்டும் என ட்விட்டர் பக்கம் மூலம் கேட்டு கொண்டுள்ளார். அதனோடு தனது லேட்டஸ்ட் போட்டோ ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை:
ராகவா லாரன்ஸ் மேலும் அந்த அறிக்கையில் மற்றுமொரு கோரிக்கையையும் முன் வைத்துள்ளார். இதுவரையில் எனது அறக்கட்டளைக்கு உதவி செய்து வந்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் எனது நன்றிகள். இத்தனை ஆண்டுகளாக என்னையும் எனது நம்பிக்கையையும் ஆதரித்த எனது நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடையால் எனது பார்வைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதை நான் செய்துள்ளேன். தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியை பெற்று கொண்டேன். இப்போது நான் நல்ல இடத்தில் இருக்கிறேன். மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகியும் உள்ளேன். மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, லாரன்ஸ் அறக்கட்டளைக்கு உங்கள் நன்கொடையை வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசீர்வாதம் மட்டும் போதும். இத்தனை ஆண்டுகளாக நான் பெற்று வந்த ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்ய உள்ளேன். என் இதயத்தின் ஆழ்மனதில் இருந்து அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்" என்ற ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.