தமிழ் சினிமாவில் மிகவும் போல்டான நடிகைகள் எத்தனையோ பேரை கடந்து வந்துள்ளோம். யாருக்கும் அஞ்சாத துணிச்சலான, நடிப்பு ரீதியாகவும் ஆளுமை ரீதியாகவும் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் முன்னணி நடிகைகளாக 80களில் கொடி கட்டி பறந்த நடிகைகள் ராதிகா மற்றும் ஸ்ரீப்ரியா.
தமிழ் சினிமா மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் இருவருக்குமே முக்கியமான இடம் உண்டு. இருவரும் ஒரே காலகட்டங்களில் முன்னணி நடிகைகளாக இருந்தாலும் அவர்கள் இருவருமே நகமும் சதையும் போன்ற நெருக்கமான தோழிகள். அன்று தொடங்கிய இவர்களின் நட்பு இன்று வரை சற்றும் தளர்வுகள் இன்றி தொடர்கிறது. அதற்கு உதாரணமாக இந்த இரண்டு பியூட்டிஸும் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், செய்த லூட்டிகள் அனைத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களின் கவனம் ஈத்துள்ளனர்.
ராதிகா சரத்குமார் தனது சோசியல் மீடியாவில் அவர்களின் அழகான பயண வீடியோ ஒன்றை பகிர்ந்து அவர்களின் அழகான நட்பு குறித்து ஒரு குறிப்பையும் பகிர்ந்துள்ளார். ஸ்ரீப்ரியாவை ஆலு என அழைக்கும் பழக்கமுடையவர் ராதிகா, அவரின் குறிப்பில் "ஆலூவும் நான் எங்கள் குழந்தை பருவம் முதல் நெருங்கிய தோழிகள். எங்களுக்குள் ஒரு சிறப்பான பந்தம் உள்ளது. நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் போது அது பயங்கரமாக இருக்கும் என பலரும் எங்களை பார்த்து பயந்தது உண்டு. ஆனால் எங்களை பற்றின இந்த இமேஜை தகர்க்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். அதை சுட்டிக்காட்டிய டிடிக்கு நன்றிகள்.
நாங்கள் இருவரும் இந்த பயணத்தின் போது பல நினைவுகளை இந்த வீடியோ மூலம் உங்களுடன் பகிர்ந்துள்ளோம். ஸ்ரீப்ரியாவும் நானும் ஒருவரை ஒருவர் பற்றி என்ன நினைக்கிறோமோ அதை ஒளிவு மறைவு இன்றி நேரடியாக பேசிக்கொள்வோம். நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஷாப்பிங் செய்வோம், எங்களின் குழந்தைகள், வாழ்க்கை, டயட், ஹெல்த், ஒர்க் அவுட் இப்படி அனைத்தையும் பற்றி பகிர்ந்து கொள்வோம். ஸ்ரீப்ரியா உடன் இருக்கும் நேரத்தில் டல் மொமெண்ட்ஸ் இருக்கவே இருக்காது. இந்த பயணம் எங்களுக்கு ஏராளமான மறக்க முடியாத நினைவுகளை கொடுத்துள்ளது" என பகிர்ந்து இருந்தார் ராதிகா.
அதே போல ஸ்ரீப்ரியா தனது குறிப்பில் "ராதிகா பாப்பா எப்போதுமே என்னுடைய முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைப்பாள். அவளுடைய பிஸியானா ஷெட்யூலின் சமயத்தில் கூட எனக்காக நேரம் ஒதுக்குபவள் அவள் மட்டுமே. நான் அழுவதற்கும் சிரிப்பதற்கும் காரணமாக இருப்பவள் ராதிகா தான். இந்த பயணம் நிச்சயம் மறக்க உடையாத ஒரு தருணமாக அமைந்தது" என பதிவிட்டுள்ளார் ஸ்ரீப்ரியா .
பல நாட்களுக்கு பிறகு ஸ்ரீப்ரியாவை இந்த வீடியோ மூலம் பார்த்த அவரின் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் விஷுவல் ட்ரீட்டாக இருந்தது. இந்த வீடியோ போஸ்ட் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.