ராதா கிருஷ்ணா குமார் இயக்கி, யு.வி கிரியேஷன்ஸ் தயாரித்து வெளிவர இருக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம் . இந்த திரைப்படம் தொடக்கத்தில் இருந்தே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது . முதல் போஸ்டர் ரிலீஸ் தொடங்கி இன்று வரையிலும் ரசிகர் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாவே இருந்து வருகிறது. இந்தநிலையில், ராதே ஷியாம் திரைப்படத்தின் ரீலீஸ் தேதி கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது, தற்போது அந்த படத்தின் கதாநாயகன் பிரபாஸ் 11 மார்ச் 2022 படம் வெளியாகும் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
படத்தின் நாயகன் பிரபாஸும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "உங்கள் அனைவரையும் காண 11 மார்ச் 2022 அன்று வருகிறேன்" என்று பதிவிட்டு இருந்தார் .
இன்று படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட பிறகு இணையத்தில் மிக வைரலாக ட்ரெண்ட் ஆகி வருகிறது " ராதே ஷ்யாம்" பிரபாஸ் உடன் இணைந்து பூஜா ஹெக்டே படத்தின் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே . முழுக்க முழுக்க காதல் கதையாக இருக்க கூடுமா அல்லது மசாலா நிறைந்த படமாக இருக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது . சச்சின் கெடேகர், பிரியதர்ஷி புலிகொண்டா, பாக்யஸ்ரீ, முர்லி சர்மா, குணால் ராய் கபூர், ரித்தி குமார், சாஷா சேத்ரி மற்றும் சத்யான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி-சீரிஸ் படத்தை வழங்குகிறது . தென்னிந்திய மொழிகளுக்கான இசையமைப்பை ஜஸ்டின் பிரபாகரன் கையாளுகிறார் மற்றும் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இது இந்தியில் மட்டுமல்ல, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளியிடப்பட இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்