அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் ராதாரவி, லெஜண்ட் சரவணனை கடுமையாக சாடி பேசியிருக்கிறார். 


இரவின் நிழல் சார்பாக பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ராதாரவி,  “ இரவின் நிழல் படத்தின் மேக்கிங் காட்சியில் அனைவரும் பார்த்திபனை கட்டிப்பிடித்து முத்தமிடுவார்கள். அதனை பார்க்கும் போது எனக்கும் பார்த்திபனை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்று தோன்றியது. இவனுக்கு எங்கிருந்து இந்த மாதிரியெல்லாம் தோன்றுகிறது என்று நினைப்பேன்.


 






படம் நடிக்கிறேன் என்று சில மூஞ்சிகள் இங்கு வந்திருக்கிறது.. நான் சாபம் விட்டால் பலித்துவிடும். அப்படித்தான் அவனை விளம்பரங்களில் நடிப்பதை பார்த்து, இவன் நிச்சயம் நடிக்க வந்துவிடுவான் என்று சொன்னேன். அதே போலவே வந்துவிட்டார். 




சிலர் இந்தப்படத்தை முன்னதாகவே இதே போன்று படம் எடுக்கப்பட்டுவிட்டது என்று குறை சொல்கிறார்கள். ஏற்கனவேதான் எல்லாம் வந்துருக்குமே. அதில் நாம் என்ன வித்தியாசம் காட்டுகிறோம் என்பதுதான் இங்கு முக்கியம்.


எல்லாரும் அவருக்கு துணை நிற்க வேண்டும்


எல்லாரும் அவருக்கு துணை நிற்க வேண்டும். கெட்ட வார்த்தை இருப்பதால் படத்திற்கு  ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். யாரு இந்த சென்சார் டீமில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதே ஒரு ஆங்கில படமாக இருந்தால் கூட்டம் அள்ளியிருக்கும். அதுவும் வெளிநாட்டு ஒரு பக்க மார்பகத்தை காண்பித்திருக்கிறாளாம் என்று சொன்னால், அது பரபரப்பாக பேசப்பட்டிருக்கும். 


பார்த்திபனின் புதிய முயற்சி


தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ இரவின் நிழல்”. உலகிலேயே முதல், “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் கடந்த ஜூலை 15 ஆம் திரையரங்குளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை  பார்த்து ரசித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்த்திபனுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.