சின்னத்திரை நடிகர்கள் வெள்ளித்திரைக்கு படையெடுப்பதும், வெள்ளித்திரை நடிகர்கள் சின்னத்திரைக்கு வருவதும் புதிதல்ல. அந்த வகையில் சின்னத்திரை நடிகர்கள் பலரும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களாக இருந்து வருகிறார்கள். 


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நான் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் ஏராளமான சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி. விஜய் டிவி மட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாச்சியார்புரம், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சொல்ல மறந்த கதை' உள்ளிட்ட ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். 



தன்னுடன் 'பிரிவோம் சந்திப்போம்' தொடரில் ஜோடியாக நடித்த நடிகர் தினேஷ் கோபால்சாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த அவர்களுக்குள் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது வரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பலமுறை தினேஷ் ரச்சிதாவுடன் மீண்டும் சேர்ந்த வாழ விருப்பம் தெரிவித்தாலும் ரச்சிதா தினேஷை மீண்டும் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள போவதாக இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துவிட்டார். 


மனக்கசப்பால் ரச்சிதா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது அவர் அடுத்தடுத்து பகிரும் இன்ஸ்டா போஸ்ட் மூலம் வெளிப்படுகிறது. மெல்ல மெல்ல தன்னுடைய இறுக்கமான சூழலில் இருந்து வெளி வரும் ரச்சிதா தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். பைனலிஸ்ட்டாக வருவார் என எதிர்பார்த்த நிலையில் 91வது நாள் வரை தாக்குப்பிடித்து பின்னர் வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சி ரச்சிதாவின் பப்ளிசிட்டியை மேலும் அதிகரித்தது. அதன் மூலம் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 


 



ஏற்கனவே தமிழ் சினிமாவில் மூன்று படங்களில் நடித்து வருகிறார் ரச்சிதா. தமிழ் மட்டுமின்றி கன்னட படத்திலும் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரைப்படத்தில் ரங்கநாயகி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரச்சிதாவுக்கு ஜோடியாக 60 வயது மதிக்கத்தக்க நடிகர் ஜக்கேஷ் என்பவர் நடித்துள்ளார். இவர் கர்நாடகா மாநிலத்தின் பாஜக எம்பியாக இருக்கிறார். அரசியலில் ஈடுபட்டு இருந்தாலும் இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 






 


இந்த செய்தி ரச்சிதாவின் ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும் அவரின் திரைப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள். வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் இன்ஸ்டாகிராம்  மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். 


மேலும் ஒரு கன்னட படத்திலும் ரச்சிதா ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது.