Rachita Mahalakshmi : கடந்த மூன்று மாதங்களாக சின்னத்திரை ரசிகர்களை கட்டிப்போட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது. 22 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசன் டைட்டில் வின்னராக சின்னத்திரை நடிகை அர்ச்சனா வெற்றி பெற்றார். 



அந்த வகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் 28ம் நாள் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து பைனல்ஸ் வரை சிறப்பாக விளையாடி பலரின் அபிமானத்தையும் பெற்றார் சின்னத்திரை நடிகர் தினேஷ். இவர் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த முதல் நாளில் இருந்து சக போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்தாலும் விடாப்பிடியாக அவர்களுக்கு டஃப் கொடுத்து இறுதி வரை விளையாடி பைனல்ஸ் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார். 


நடிகர் தினேஷ் பிரிந்த தனது மனைவி ரச்சிதா மஹாலக்ஷ்மியை மகிழ்விப்பதற்காகவும், இந்த வெற்றியை சமப்பிப்பதற்காகவும் பிக்பாஸ் போட்டியில் நுழைந்ததாக அவரே பலமுறை நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார். முடிந்துபோன அவர்களின் திருமண வாழ்க்கையை புதுப்பித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே தினேஷ் ஆசையாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறை தினேஷ் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதும்  இதை வெளிப்படுத்துகையில் அதற்கு சரியான பதிலடி கொடுப்பதுபோல தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தினேஷை தாக்கி போஸ்ட் பகிர்ந்து வந்தார் ரச்சிதா. 



பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ரச்சிதாவை நேரில் சென்று பார்க்க இருப்பது குறித்து தினேஷ் கூறியதற்கு 'நேர்கொண்ட பார்வை' படத்தில் இடம்பெற்ற வசனத்தை போஸ்ட் செய்துள்ளார் ரச்சிதா. 


"தெரிஞ்ச பொண்ணா இருந்தாலும், தெரியாத பொண்ணா இருந்தாலும், கேர்ள் ஃப்ரண்டா இருந்தாலும், லவ்வரா இருந்தாலும், செக்ஸ் வர்கரா இருந்தாலும், ஏன் மனைவியா இருந்தாலும் அவங்க நோ சொன்னா நோ தான்" என்ற வசனத்தை காட்சியின் புகைப்படத்துடன் போஸ்ட் செய்து 'புரிஞ்சா சரி' என குறிப்பிட்டு போஸ்ட் பகிர்ந்துள்ளார். 



ரச்சிதா - தினேஷ் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' தொடர் மூலம் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருவரும் 2015ம் திருமணம் செய்துகொண்டனர். மிகவும் பிரபலமான சின்னத்திரை ஜோடியாக வலம் வந்த ரச்சிதா -  தினேஷ் ஜோடியின் திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்து போனது. 


ரச்சிதா மீண்டும் தினேஷுடன் சேர்ந்து வாழ்வதில் சிறிதும் விருப்பப்படவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை என்பது அவர் வெளியிடும் ஒவ்வொரு போஸ்ட் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. ரச்சிதாவின் இந்த போஸ்டுக்கு பிறகு தினேஷ் பதிலளிப்பார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.