ராயன் (Raayan)


'துள்ளுவதோ இளமை' படத்தில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய தனுஷ், தற்போது நடிகராக 50ஆவது படத்தை எட்டியுள்ளார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் எனப் பல விதங்களில் திரைத்துறையில் தன் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் தனுஷ்.


தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கிறது ராயன் . இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜாக்கி இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராயன் படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் முதல் பாடலான அடங்காத அசுரன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.


ராயன் முதல் பாடல்






முன்னதாக தனுஷ் நடித்த அம்பிகாபதி  மற்றும்  மரியான் ஆகிய படங்களில் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த இரண்டு படங்களின் ஆல்பமும் மிகப்பெரிய ஹிட் ஆகின. குறிப்பாக மரியான் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரசிகர்களைக் கவர்ந்தன. தற்போது மூன்றாவது முறையாக ரஹ்மான் மற்றும் தனுஷ் ராயன் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள ‘அடங்காத அசுரன்’ என்கிற இந்தப் பாடலை ரஹ்மான் இசையில் தனுஷ் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கான நடனத்தை நடிகர் பிரபுதேவா வடிவமைத்துள்ளார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது.