“என் பாதை வேறு, அப்பாவின் பாதை வேறு, அவர் லெவலுக்கு என்னால் வர முடியாது” என்று கரூரில் ’இராவணக் கோட்டம்’ பட  நடிகர் சாந்தனு பாக்யராஜ் பேட்டியளித்தபோது தெரிவித்தார்.




நடிகரும், இயக்குநர் பாக்யராஜ் மகனுமாகிய சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் இராவணக் கோட்டம் எனும் திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நடித்த சாந்தனு தமிழகம் முழுவதும், திரையரங்குகளில் நேரடியாக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் கரூர் நகரில் அஜந்தா திரையரங்கில் இராவணக் கோட்டம் திரையிடப்பட்டுள்ளது. அந்த திரையரங்கத்திற்கு அவர் வருகை தந்தார். அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து, டிரம்ஸ் செட் வாத்திய்ங்கள் முழங்க பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.




பின்பு, திரையரங்கத்திற்குள் சென்று படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது திரையரங்கில் இருந்தவர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சாந்தனு, இராவணக் கோட்டம் நன்றாக போய் கொண்டு இருப்பதாகவும், பெரிய படங்களுடன் தன்னைப் போன்ற சிறிய நடிகர்களின் படங்களையும் பார்க்க வேண்டும் என்றார். மேலும், “அப்பா பாதை வேறு, என் பாதை வேறு அவர் லெவலுக்கு என்னால் வர முடியாது. அடுத்து கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்ட படம் ஒன்றில் நடித்து கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.




நடிகர் விஜய் படத்தில் நடித்த மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் எனவும், அடுத்தடுத்து தன்னுடைய படங்களின் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், அதில் முழு கவனத்தை செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண