தென்னிந்திய திரையுலகில், நடிகை, தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முக திறமைக் கொண்டு நடமாடி வருபவர் நடிகை ராதிகா. இவரது அப்பா எம் ஆர் ராதா, 1950-1960 காலகட்டங்களில் மிகப்பெரிய நடிகர். வில்லத்தனத்திலும் ஹீரோயிஸம் காட்டிய இவரை தமிழ் திரையுலகம் இன்னும் மறக்காமல் உள்ளது. இலங்கையிலும், பிரிட்டனிலும் பட்டம் பயின்ற ராதிகா, 1985ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் படம் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டார். ஆரம்பத்தில் தமிழ் வசனங்களை பேசவே சிரமப்பட்ட இவர், பின்னாளில் 80’ஸ் கதாநாயகிகளுள் சிறந்த ஒருவராக விளங்கினார். ராதிகா, தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சிறந்த கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
அம்மாவிற்கு பிறந்தநாள்!
ராதிகாவின் அப்பா பக்காவான சென்னை வாசி என்றால், அவரது அம்மா கீதா ஒரு இலங்கை வாசி. ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த எம் ஆர் ராதா நான்கு திருமணங்கள் செய்து கொண்டார். இவர் கடைசியாக திருமணம் செய்தது ராதிகாவின் அம்மா கீதாவைத்தான். எம் ஆர் ராதா-கீதா ராதா தம்பதிக்கு ராதிகா, நிரோஷா உள்பட மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர்.
ராதிகா சரத்குமார் தனது அம்மாவின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடுவது வழக்கம். சென்ற வருடம் கூட, தனது அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டிருந்தார் ராதிகா. அவ்வகையில், இந்த வருடமும் தன் அம்மாவிற்காக ‘பர்த்டே போஸ்ட்’ ஒன்றை பதிவிட்டுள்ளார். தனது அம்மாவுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை போஸ்ட் செய்துள்ள அவர், “அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது அம்மா உண்மையான இரும்புப் பெண் என்றும் அப்பதிவில் கூறியுள்ளார்.
பிரபலங்கள் வாழ்த்து:
ராதிகா சரத்குமாரின் குடும்பமும் நட்பு வட்டாரமும் பிரபலங்களால் நிறைந்தது. ராதிகா தனது அம்மாவிற்காக வெளியிட்டுள்ள பதிவிற்கு நடிகைககள் சுஹாசினி, ரம்பா, மீனா, பூர்ணிமா மற்றும் குஷ்பு ஆகியோர், “ஹேப்பி பர்த்டேஅம்மா” எனவும் “ஹேப்பி பர்த்டே ஆண்டி” எனவும் கமெண்ட் செய்துள்ளனர்.