தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும் நடிகருமான ரா. சங்கரன் உடல்நலக்குறைவால் தன்னுடைய 92 வயதில் காலமானார். திரைத்துறையைச் சேர்ந்த மூத்த கலைஞர் ஒருவரின் மரணம் திரைத்துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 


Mr . சந்திரமௌலி :


1974ம் ஆண்டு வெளியான 'ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரா.சங்கரன். பல படங்களை இயக்கியதுடன் நடிகராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதிலும் குறிப்பாக இயக்குநர் மணிரத்தினத்தின் 'மௌன ராகம்' திரைப்படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக சந்திரமௌலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கார்த்திக் அவரை "Mr . சந்திராமௌலி" என அழைக்கும் அந்த சீன் இன்றும் மிகவும் பிரபலமான ஒரு சீன். 


ரா. சங்கரன் இயக்குநராவதற்கு முன்னர் உதவி இயக்குநராக பல இயக்குநர்களிடம் இருந்துள்ளார். அந்த சமயத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உடனான தன்னுடைய பழக்கம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார். 


 



ஷாக்கான எம்.ஜி.ஆர் : 


 கே.சங்கர் இயக்கத்தில் 1963ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பணத்தோட்டம்'. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி நடிப்பில் உருவான இப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ரா. சங்கரன். அந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் எம்.ஜி.ஆர் 'அம்மா போஸ்ட்' அப்படினு அவர் சொல்லணும்.


அந்தக் காட்சியில் அவர் ஸ்டண்ட் பாணியில் எகிறியபடி 'அம்மா போஸ்ட்' என சொல்லி ஜம்ப் பண்ணி வந்தாராம். அதை பார்த்த ரா. சங்கரன் சார் இன்னொரு டேக் எடுத்துக்கலாம் சார் என சொன்னாராம். அதை பார்த்த எம்.ஜி.ஆர் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம். எம்.ஜி.ஆரிடம் இன்னோரு டேக் கேட்டவங்க யாருமே இல்லையாம்!


அருகில் இருந்த அனைவரும் ரா.சங்கரனை அழைத்து திட்டியுள்ளார்கள். அதற்கு “எனக்கு அவர் நடித்ததில் திருப்தி இல்லை, அதனால் தான் சொன்னேன்” என சொல்லியுள்ளார் சங்கரன். அதைக் கேட்ட எம்.ஜி.ஆர் “அவர் என்ன பீல் பண்றரோ, அதே போல பண்ணிடலாம்” என சொல்லி பெருந்தன்மையாக இன்னொரு டேக்கில் நடித்தாராம்.


அதுவும் அதே ஸ்டண்ட் போல இருந்ததால் மீண்டும் ஒன்ஸ்மோர் டேக் கேட்டுள்ளார் சங்கரன். அதைப் பார்த்து எம்.ஜி.ஆர் அவர் அருகில் வந்து "நீங்க வேற பெரிய நடிகர்களோட (நடிகர் சிவாஜி என குறிப்பிடாமல்) நடிப்பை எல்லாம் பார்த்துட்டு வந்து இருக்கீங்க. என்னோட டைப் வேற. அது போல என்கிட்டே எதிர்பார்க்காதீங்க. உங்க ஆர்வத்தை நான் பாராட்டுறேன். அதை நான் கெடுக்க விரும்பவில்லை. நீங்க ஏதோ எதிர்பார்க்குறீங்க.  நீங்க எப்படினு சொன்னீங்கன்னா அப்படி பண்ணலாம்" என சொன்னாராம் எம்.ஜி.ஆர். 


இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாக சென்று கொடுக்கிறது.