ட்விட்டரில் வைரலாகி பலரால் ட்ரோல் செய்யப்பட்ட பிரபலமில்லாத ஒரு இணையவாசியின் பதிவிற்கு நடிகர் மாதவன் ஆதரவு அளித்துள்ளார்.
இணையத்தில் ஒரு பெண் ஷாருக்கானின் பிரபல பாடலான 'சம்மக் சல்லோ' பாடலுக்கு கரீனா கபூரை போல நடனம் ஆடி டிக் டாக் செய்து பதிவிட்டிருந்தார். அது பல இணையவாசிகளால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. அதனால் மனம் உடைந்த அவர் முதன் முறையாக முயற்சி செய்தேன், என்னை ஊக்கப்படுத்தவில்லை என்றாலும் தொந்தரவு செய்யாமல் இருங்கள் என்று பதிவிட்டுக்கொண்டிருந்தார். அவரை மகிழ்விக்க முடிவு செய்த மேடி, அவருடைய பதிவில் கமெண்ட் செய்தார்.
நன்றாக உள்ளது, உற்சாகத்தை தொடர்ந்து தக்கவைத்து கொள்ளுங்கள், மகிழ்ச்சியையும், பாசிட்டிவிட்டியையும் பரப்புங்கள். சோகமான நெகட்டிவ் மனிதர்களை முழுமையாக புறந்தள்ளுங்கள்" என்று எழுதி ஹார்ட் எமோஜிக்கள் பறக்க விட்டார்.
மாதவனின் இந்த அழகான பதிவுக்கு பதிலளித்த அந்த பெண், "நான் எப்போதும் 'சாச் கே ரஹா ஹே தீவனா' பாடலை கேட்பவள், நீங்கள் நேரம் ஒதுக்கி என் பதிவுக்கு பதிலளித்து பெருமையாக உள்ளது, மிக்க நன்றி" என்று பதிவிட்டிருந்தார். நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் 'டீக்கப்புல்டு' திரைப்படத்தில் சேக்ரட் கேம்ஸ் புகழ் சர்வீன் சாவ்லாவுடன் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் மாதவன் முடித்திருக்கிறார். இத்திரைப்படம் விவாகரத்துக்கு விண்ணப்பித்த இருவரிடையே நிகழும் சம்பவங்களை காமெடியாக சொல்கிறது.
அமேசான் ப்ரைமிற்காக செய்த பிரீத் வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் உலகில் அறிமுகமான மாதவன் செட்டில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதனுடன் டீக்கப்புல்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக குறிப்பிட்டார்.
ஆர்யா ஐயர் எனும் எழுத்தாளர் பாத்திரத்தில் நடிக்கும் மாதவன், திருமணமாகி இரு குழந்தைகளுடன் வாழ்கிறார். அவர்களுக்கு விவாகரத்து வேண்டும் ஆனால் குடும்பம், குழந்தைகள் என்ற காரணங்களால் விவாகரத்துக்கு பயப்படும் கதைக்களம். இந்த தொடரை காமியா, ரூஹி போன்ற திரைப்படங்களை இயக்கிய ஹர்திக் மேத்தா இயக்குகிறார். பாம்பே ஃபேபில்ஸ் மற்றும் அந்தோளன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
உண்மைக்கதையை அடிப்படையாக கொண்ட 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபக்ட்' திரைப்படத்திலும் மாதவன் நடித்துக்கொண்டுள்ளார். அது அவர் இயக்குநராக அவதாரம் எடுக்கும் முதல் திரைப்படமாகும். தற்போது அவர் 'அமெரிக்கி பண்டிட்' திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.